செய்திகள் :

210 தொகுதியில் வெற்றி! இபிஎஸ் சொல்வது பற்றி உதயநிதி பதில்!

post image

கரூர்: தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூரில் கோவைச் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, பகுதி ஒன்றியச் செயலாளர்கள் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

திமுக மாவட்டச் செயலாளரும், கரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.

கூட்டம் நிறைவடைந்து, கூட்டரங்கை விட்டு வெளியே வந்த தமிழக துணை முதல்வரிடம் செய்தியாளர்கள், தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் அளித்த அவர், அதற்காக நான் 220 தொகுதிகள் என்று சொல்ல வேண்டுமா? அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள். அதை மக்கள்தான் முடிவெடுப்பார்கள்.

நாங்கள் எங்கள் பணிகளை செய்து வருகிறோம். முதல்வர் மக்களை சந்தித்து வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர் அவர் பணியை செய்து வருகிறார் என்றார் அவர்.

பேட்டியின்போது கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி.செந்தில்பாலாஜி உடனிருந்தார்.

Deputy Chief Minister Udhayanidhi Stalin said in Karur that Edappadi Palaniswami is saying that he will win 210 seats in the elections, but the people will decide.

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது, இனிஷியல் போட்டுக் கொள்ளலாம்: ராமதாஸ்

என் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்றும் இனிஷியல் போட்டுக் கொள்ளலாம் என்றும் பாமக தலைவர் அன்புமணிக்கு தந்தையும் அக்கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் சூசகமாக தெரிவித்துள்ளார்.கும்பகோணத்தில் பாமக நிறுவனர் ரா... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

திருவாரூர் மாவட்டத்துக்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.திருவாரூருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட சன்னநிதி ... மேலும் பார்க்க

நலத்திட்டங்களைப் பெறுவோர் தூதுவர்களாக வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்

அரசு நலத்திட்டங்களைப் பெறும் மக்கள் தூதுவர்களாகச் செயல்பட வேண்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தர். நாமக்கல்லில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் முடிவற்ற திட்டப் பணிகளைத் தொ... மேலும் பார்க்க

நெல் ஜெயராமனுக்கு திருத்துறைப்பூண்டியில் நினைவுச் சிலை! - முதல்வர் அறிவிப்பு

பாரம்பரிய நெல் வகைகளை காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மறைந்த நெல் ஜெயராமனின் சிலை திருத்துறைப்பூண்டியில் நிறுவப்படும் என்று திருவாரூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவாரூர் ... மேலும் பார்க்க

1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு டிஆர்பி தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதுகலை ... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை உத்தரவு நிறுத்திவைப்பு!

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31 வரை நிறுத்திவைத்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத... மேலும் பார்க்க