களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது!
3ஆம் நாள் முடிவு: 8 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை!
காலேவில் நடைபெறும் 2ஆவது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
2ஆவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் 257க்கு ஆல் அவுட்டானது இலங்கை. அடுத்து விளையாடிய ஆஸி. 414 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
2ஆவது இன்னிங்ஸில் இலங்கை அணி 62.1 ஓவர்கள் முடிவில் 211/8 ரன்கள் எடுத்தது. அத்துடன் 3ஆவது நாள் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
ஆல்-ரவுண்டர் மிதவேகப் பந்துவீச்சாளரான பியூ வெப்ஸ்டர் சுழல்பந்து வீசி 1 விக்கெட் எடுத்து அசத்தினார். ஸ்மித்தின் கேப்டன்சியை (தலைமைப் பண்பு) வர்ணனையாளர்கள் பாராட்டி வருகிறார்கள்.
ஆஸி. சார்பில் மேத்யூ குன்னஹ்மேன் 4, நாதன் லயன் 3, பியூ வெப்ஸ்டர் 1 விக்கெட்டும் எடுத்து அசத்தினார்கள்.
3ஆம் நாள் முடிவில் இலங்கை அணியில் தற்போது குசால் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
2ஆவது இன்னிங்ஸ் இலங்கை அணி ஸ்கோர் கார்டு
பதும் நிசாங்கா -8
திமுத் கருணரத்னே - 14
தினேஷ் சண்டிமால் - 12
ஏஞ்சலோ மேத்திவ்ஸ் - 76
கமிந்து மெண்டிஸ் - 14
தனஞ்செய டி செல்வா - 23
குசால் மெண்டிஸ் - 48*
ரமேஷ் மெண்டிஸ் - 0
பிரபாத் ஜெயசூர்யா - 6