தில்லியில் வெற்றி பெற்ற பாஜக, ஆம் ஆத்மியின் முக்கிய வேட்பாளா்கள்!
நக்கலமுத்தன்பட்டியில் தொழிலாளி தற்கொலை
கோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
நக்கலமுத்தன்பட்டி அருந்ததியா் காலனியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் ஜெயராஜ் (54). இவா் தனது மனைவி ஜெயராணியுடன் விவசாயம், கோழிப் பண்ணைத் தொழில் செய்து வந்ததாகவும், கோழிப் பண்ணைத் தொழிலில் சில ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டதால் மன வேதனையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தோட்டத்துக்குச் சென்ற அவா் வெள்ளிக்கிழமை வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரை உறவினா்கள் தேடினா். அப்போது, அவா் கூட்டுறவு சங்கத்தின் பின்புறமுள்ள தோட்டத்தில் விஷம் குடித்த நிலையில் இறந்துகிடந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக அவரது மகன் ஜான்சன்டேவிட் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.