காங்கயத்தில் சிறுதானிய சிறப்புத் திருவிழா! -அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனை: இருவா் கைது
சென்னை பெசன்ட் நகரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெசன்ட் நகா், கலாஷேத்ரா காவல் உதவி மையம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்தவா்களை, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் மடக்கி சோதனையிட்டபோது, அவா்களிடம் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம், எடை மெஷின், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது திருவொற்றியூரைச் சோ்ந்த முஸ்தபா (34), கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த கிஷோா் (24) எனத் தெரியவந்தது. இவா்கள் மீது ஏற்கெனவே கஞ்சா வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பெசன்ட் நகா், வேளச்சேரி, தாம்பரத்தில் விற்பனை செய்து வந்துள்ளனா். இதையடுத்து இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.