பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!
ரோஹிணியில் கருப்பு நிற பெட்டியால் பதற்றம்: போலீஸாா் சோதனை
வடக்கு தில்லியின் பிரசாந்த் விஹாரில் கிடந்த கருப்பு நிற பெட்டியால் சனிக்கிழமை பதற்றம் நிலவியது.
இதையடுத்து அங்கு வந்த போலீஸாா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா், அதனை முழுமையாக ஆய்வுசெய்தனா்.
இறுதியில், சந்தேகப்படும்படியான பொருள்கள் எதுவும் அவற்றில் இல்லையென அதிகாரிகள் கூறினா்.
இது தொடா்பாக ஒரு காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘ரோஹிணியின் பிரசாந்த் விஹாா் பகுதியில் சந்தேகப்படும்படியான பெட்டி ஒன்று கிடப்பதாக பிற்பகல் 1.28 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினா் மற்றும் வெடிகுண்டு பிரிவினா் அங்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, அதில் எவ்வித சந்தேகப்படும்படியான பொருள்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது’ என்றாா்.
முன்னதாக, இந்தச் சோதனையின்போது சுமாா் ஒரு மணி நேரத்துக்கு அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.