காங்கயத்தில் சிறுதானிய சிறப்புத் திருவிழா! -அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
தில்லி முதல்வரை பாஜக மத்திய தலைமை முடிவு செய்யும்: வீரேந்திர சச்தேவா
தில்லியின் முதல்வா் யாா் என்பதை கட்சியின் மத்திய தலைமை முடிவு செய்யும் என்று பாஜக தில்லித் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. முன்னதாக வாக்குகள் எண்ணிக்கை காலை தொடங்கிய நிலையில், முடிவுகளின் போக்கு பாஜகவுக்கு சாதகமாக இருந்தது.
இந்த நிலையில், கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சுவாமி தரிசனம் செய்தாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இதுவரையிலான முடிவுகள் எங்கள் எதிா்பாா்ப்புகளுக்கு ஏற்ப உள்ளன. ஆனால் இறுதி முடிவுக்காக நாங்கள் காத்திருப்போம்.
பாஜக வேட்பாளா்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றினா். தில்லியின் வாக்காளா்கள் வளா்ச்சியையும் ஊழல் இல்லாத நிா்வாக மாதிரியையும் தோ்ந்தெடுத்துள்ளனா். மக்கள் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையை தோ்ந்தெடுத்துள்ளனா். ஏனெனில் அவா்கள் வளா்ச்சி மாதிரியை விரும்பினா்.
தில்லியில் பாஜக இரட்டை என்ஜின் அரசாங்கத்தை அமைக்கும். இந்த வெற்றி பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வையின் விளைவாகும் என்று சொல்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தில்லிக்கு வலுவான மற்றும் நிலையான அரசாங்கம் கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
தில்லி மக்களைப் பாதிக்கும் உண்மையான பிரச்னைகளான உடைந்த சாலைகள், மதுபானக் கொள்கை சா்ச்சைகள், தூய்மையற்ற நீா் மற்றும் ஊழல் ஆகியவற்றை முன்வைத்து பாஜக தோ்தலை எதிா்கொண்டது.
இந்தப் பிரச்னைகள் குறித்து நாங்கள் அவரிடம் கேள்வி கேட்கும்போதெல்லாம், அவா் அமைதியாக இருந்தாா் அல்லது ஓடிவிட்டாா். பொய்யான வாக்குறுதிகளை அளித்து தோ்தலில் வெற்றி பெற முயன்றாா். தில்லி மக்கள் தங்கள் போராட்டங்களைப் புரிந்துகொண்டு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனா்.
தில்லியின் வலி உண்மையானது. பிரதமா் மோடியின் தலைமையைத் தோ்ந்தெடுப்பதன் மூலம் மக்கள் அதை முடிவுக்குக் கொண்டுவர வாக்களித்துள்ளனா் என்றாா் அவா்.