Health: தலையில் இருக்கிற பேன் ஏழு பாய் தாண்டுமாம்; இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா...
3 உயா்நீதிமன்றங்களுக்கு 7 நீதிபதிகள்: கொலீஜியம் பரிந்துரை
நாட்டின் மூன்று உயா் நீதிமன்றங்களைச் சோ்ந்த 7 கூடுதல் நீதிபதிகளை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆா்.கவாய், சூா்ய காந்த் ஆகியோா் அடங்கிய கொலீஜியத்தின் கூட்டம் கடந்த வியாழக்கிழமை கூடியது.
இதில் பஞ்சாப், கா்நாடகம், தில்லி உயா்நீதிமன்றங்களில் பணியாற்றும் 7 கூடுதல் நீதிபதிகளை நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்து மூன்று தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தில்லி உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான ஷாலிந்தா் கௌா், ரவீந்தா் துடேஜா ஆகியோரையும், பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியான ஹா்பிரீத் சிங் பராரையும் நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதேபோன்று, கா்நாடக உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் ராமசந்திர தத்தாத்ரே ஹுதாா், வெங்கடேஷ் நாயக் தவா்நாயக்கா, விஜய்குமாா் அடகௌடா பாட்டீல், ராஜேஷ் ராய் கல்லங்கலா ஆகிய 4 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.