செய்திகள் :

3 டிகிரி வரை வெப்பநிலை அதிகரிக்கும்: அதேசமயம்..!

post image

தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

மே 1 முதல் 7 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை

இன்று முதல் மே 4 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதிகபட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்.

மே 5ல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

திமுகவை வீழ்த்த அம்மாவின் தொண்டர்கள் ஓரணியாக வேண்டும்: டிடிவி தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒரே அணியில் சேருமாறு அமமுக செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.மே தினத்தையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிலாளர் தின பொதுக்கூட்டம் ஏற்பாடு செய... மேலும் பார்க்க

தனியார் வங்கியால் விவசாயி தற்கொலை! தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை!

விவசாயியின் தற்கொலைக்கு காரணமான தனியார் வங்கி மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.சேலம் மாவட்டத்தில் விவசாயியான வடிவேலு என்பவர், தனியார் வங்க... மேலும் பார்க்க

மதுரை வந்த விஜய்.. தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மதுரை: படப்பிடிப்புக்காக, சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு, அவரது தொண்டர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக திண்டுக்க... மேலும் பார்க்க

அட்சய திருதியை: தமிழ்நாட்டில் ரூ.272.32 கோடி வருவாய் ஈட்டிய பதிவுத்துறை!

சென்னை : புதன்கிழமை அட்சய திருதியை நாள் என்பதால், ஏராளமானோர் சொத்துகள் வாங்கியதன் மூலம், தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் ரூ.272.32 கோடி வருவாயை பதிவுத்துறை ஈட்டியிருக்கிறது.சொத்துகள் வாங்க - விற்க அதி... மேலும் பார்க்க

ஒரே நாளில் ரூ. 272 கோடி வருவாய்! - பத்திரப் பதிவுத் துறை தகவல்

பத்திரப் பதிவில் நேற்று (ஏப்.30) ஒரேநாளில் ரூ. 272 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த முக்கிய நாள்களில் தமிழக பத்திரப் பதிவுத் துறை சார்பில் கூடுதல் டோக்கன்கள் ... மேலும் பார்க்க

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை

நான் என் வேலையைப் பார்க்கச் செல்கிறேன், யாரும் என்னை பின்தொடர வேண்டாம் என்று மதுரை விமான நிலையத்தில் பல மணி நேரமாகக் காத்திருக்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியிருக்கிறார்.... மேலும் பார்க்க