திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் வந்தே பாரத் ரயில்களையும் பராமரிக்க அனுமதி
'பஸ்ஸைப் பாதியில் நிறுத்தி டிரைவர் தொழுகை' - வைரல் வீடியோ; அமைச்சரின் அதிரடி நடவடிக்கை
கர்நாடகாவில் ஹூப்பள்ளி - ஹவேரி சாலையில் அரசு பேருந்து டிரைவர் ஒருவர் சாலையோரமாகப் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், டிரைவர் சீட்டிற்குப் பின் இருக்கும் பயணிகள் சீட்டில் டிரைவர் தொழுகை செய்கிறார்.
பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே சில பேருந்துகள், மற்ற வாகனங்கள் போய்கொண்டிருப்பது தெரிகிறது.
அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகளோ, டிரைவருக்காகக் காத்திருக்கின்றனர் என்பதைப் பார்க்க முடிகிறது.
இந்த வீடியோவைப் பயணி ஒருவர்தான் எடுத்துள்ளார்.

இந்த வீடியோ வைரலாக, டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடகாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் போக்குவரத்துத் துறை அதிகாரிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பொதுத்துறையில் வேலை பார்க்கும் பணியாளர்கள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம்.
அனைவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்றக் கூடிய உரிமை இருந்தாலும், அலுவலக நேரங்களில் இது செய்வது தவறு.
பயணிகள் எல்லாம் காத்திருக்க, சாலையின் நடுவே பேருந்தை நிறுத்திவிட்டு, தொழுகை செய்தது ஆட்சேபனைக்கக் கூடியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs