உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை (ஏப்.21) மீண்டும் கூடுகிறது. பேரவை காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறவுள்ளது.
இதன்பிறகு, மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அந்தத் துறையின் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளாா்.
புனித வெள்ளி, சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடுமுறை தினங்கள் என்பதால் மூன்று நாள்கள் பேரவை கூடவில்லை. விடுமுறை தினங்களுக்குப் பிறகு, சட்டப் பேரவை திங்கள்கிழமை மீண்டும் கூடவுள்ளது.