செய்திகள் :

3-வது டெஸ்ட் மழையால் பாதிக்கப்பட்டால்..! இந்திய அணி இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி?

post image

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் - கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவருகிறது. இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது.

இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதிபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்கின்றன.

வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!

தென்னாப்பிரிக்காவின் இறுதிச்சுற்று கிட்டத்தட்ட 90 சதவீதம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறுதிச் சுற்றுக்கான 2-வது அணி இந்தியாவா? அல்லது ஆஸ்திரேலியாவா? என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 2-வது போட்டியில் தோல்வியடைந்தது. இனி அனைத்து போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டயாத்தில் இந்திய அணி இருக்கிறது.

இந்திய அணியின் 4-வது போட்டியும், தென்னாப்பிரிக்கா- பாகிஸ்தான் ஆகிய அணிகளின் முதல் போட்டியும் பாக்ஸிங்டேவான டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்க அணி 2 போட்டிகளிலும், இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 2 போட்டிகளிலும் விளையாடவிருக்கின்றன.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது போட்டி பிரிஸ்பேனின் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு பந்துவீசத் தடை விதித்த ஐசிசி!

முதல் நாள் ஆட்டம் 13.2 ஓவர்கள் மட்டும் பந்துவீசப்பட்டு முழுமையாக மழையால் பாதிக்கப்பட்டது. பின்னர் 2-வது நாள் ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 445 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 152 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 101 ரன்களும் விளாசினர்.

அடுத்து 3-வது நாள் ஆட்டத்திலும் விட்டு விட்டு மழைபெய்து கொண்டே இருந்தது. தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுலை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதையடுத்து 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்துள்ளது. கேஎல் ராகுல் 33 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

பிரிஸ்பேன் டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியைவிட இந்திய அணி 394 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. எஞ்சிய இரண்டு நாள்கள் மட்டும் உள்ள நிலையில் இந்திய அணி முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸும், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸும் இன்னும் விளையாட வேண்டியிருப்பதால் இந்த டெஸ்ட் பெரும்பாலும் டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியாவின் 4-வது மற்றும் 5-வது டெஸ்ட் போட்டிகள் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடைபெறவுள்ளது.

பும்ராவை குரங்கு இனத்துடன் ஒப்பிட்ட வர்ணனையாளர்! கொந்தளித்த ரசிகர்கள்!

பிரிஸ்பேன் டெஸ்ட் சமனில் முடிந்தால் இந்தியா எவ்வாறு உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய அணி எவ்வாறு தகுதிபெறும் என்பது குறித்து இங்கே காண்போம்.

  • மெல்போர்ன் மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால், மற்ற அணிகளில் முடிவுகளுக்கு காத்திருக்காமல் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும்.

  • அதேவேளையில் இந்தத் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று, இலங்கை அணி 0-2 தோல்வியைத் தழுவினால் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற முடியாது. அதனால், ஒரு போட்டியிலாவது இலங்கை அணி வெற்றிபெறவேண்டும்.

  • இந்தத் தொடரில் 2-2 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றால், ஆஸ்திரேலிய அணியை இலங்கை அணி கட்டாயமாக 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்ய வேண்டும்.

  • இந்தத் தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் முடியும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவை இலங்கை அணி சமன் செய்ய வேண்டும் அல்லது முழுமையாக வீழ்த்தவேண்டும்.

  • இந்தத் தொடரில் மீதமிருக்கும் 3 போட்டிகளில் சமன் அல்லாமல், எந்தவொரு போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், இந்திய அணி, இறுதிப்போட்டிக்குச் செல்லாமல் நடையைக் கட்டவேண்டிய நிலை ஏற்படும்.

    முதல் டி20: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்

மே.இ.தீவுகள் தலைமைப் பயிற்சியாளராகிறார் டேரன் சமி!

மேற்கிந்திய தீவுகள் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார். செயின்ட் வின்சென்ட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் இயக்குநர் மைல்ஸ... மேலும் பார்க்க

பும்ராவை போல ஒரு வீரரை இதுவரை பார்த்தது இல்லை: ஆலன் பார்டர் புகழாரம்!

பும்ராவைப் போல ஒரு வீரரை இதுவரை பார்த்ததில்லை என்று ஆலன் பார்டர் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆலன் பார்டர், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் மால்கம் மார்ஷல் மற்றும் இந... மேலும் பார்க்க

சச்சினின் பேட்டிங்கை நினைவில் கொள்ளுங்கள்: விராட் கோலிக்கு கவாஸ்கர் அறிவுரை!

சச்சின் டெண்டுல்கரின் பேட்டிங்கை நினைவில் கொள்ளுங்கள் என்று விராட் கோலிக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடர்: ஆப்கன் அணி அறிவிப்பு!

ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியில் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷீத்கான் மீண்... மேலும் பார்க்க

வெற்றிப் பாதையில் நியூஸி.! இங்கிலாந்துக்கு 658 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 658 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்றுவருகிறது.இந்தத் ... மேலும் பார்க்க

வங்கதேச கிரிக்கெட் வீரருக்கு பந்துவீசத் தடை விதித்த ஐசிசி!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச வங்கதேச கிரிக்கெட் வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் சர்வதேச டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வுபெற்... மேலும் பார்க்க