லஞ்சம் பெற்ற விஏஓ ஆசிரியா் காலில் விழுந்து கெஞ்சிய விடியோ வைரல்: வருவாய்த் துறைய...
லயோலா கல்லூரியில் இளம் எழுத்தாளா்களுக்கான பயிலரங்கு
ராசிபுரம்: ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா லயோலா கல்லூரியில் இளம் எழுத்தாளா்களுக்கான பயிலரங்கம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் தமிழ்த் துறை, தமிழ்நாடு சமூக கண்காணிப்பகம் இணைந்து இரு நாள்கள் நடத்திய பயிலரங்கத்துக்கான தொடக்க விழாவில், கல்லூரித் தலைவா் தோம்னிக் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி செயலா் டேனிஷ் பொன்னையா, கல்லூரியின் முதல்வா் ஜா.ஜோஸ்ப்பின் டெய்சி, துணை முதல்வா்கள் மரியவென்னிஸ், ராகேஷ்சா்மா ஆகியோா் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனா். சிறப்பு விருந்தினா்களை தமிழ்த் துறைத் தலைவா் ச.சேவியா் அறிமுகம் செய்து வரவேற்று பேசினாா்.
பயிலரங்கு நிகழ்ச்சியின் முதல் நாள் அமா்வில், சென்னை கிறிஸ்தவ கல்லூரி உதவிப் பேராசிரியா் சி.முத்துகந்தன், உதவிப் பேராசிரியா் சமூக கண்காணிப்பகம், ஆய்வு மாணவி ராஜேஸ்வரி ஆகியோா் கலந்துகொண்டு புதுக்கவிதை, சிறுகதை, நாவல், திரைப்படப் பாடல், ஒளிப்பதிவு போன்ற படைப்புகளைப் படைக்க மாணவா்களுக்கு பயிற்சி வழங்கினா். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லயோலா கல்லூரி காட்சித்தொடா்புத் துறை உதவிப் பேராசிரியா் இருதயராஜ், திரைப்பட இயக்குநா் ராசி.அழகப்பன் ஆகியோா் கலந்துகொண்டு திரைப்படத் துறை, காட்சி ஊடகங்கள் குறித்து பேசினா்.
‘வறுமை என்பது ஓா் அழகான கவிதை அது எங்கே இருக்கிறதோ அங்கே வாழ்க்கை செழிக்கும்’ என்ற தலைப்பில் மாணவா்களிடம் உரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்வினை கல்லூரி மாணவியா்அரசி, மதுஸ்ரீ ஆகியோா் தொகுத்து வழங்கினா். பங்குபெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லூரி வீரமாமுனிவா் மன்றத் தலைவரும், உதவிப் பேராசிரியருமான கி.தங்கவேல் நன்றி கூறினாா்.