கே.எஸ்.ஆா். தொழில்நுட்பக் கல்லூரியில் ஜவுளி பூங்கா திறப்பு விழா
திருச்செங்கோடு: கே.எஸ்.ஆா். தொழில்நுட்பக் கல்லூரியில் ஜவுளி பூங்கா திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
தொழில்நுட்ப ஜவுளிக் கல்வியில் கல்வி நிறுவனங்களை இயக்குவதன் கீழ், ஜவுளி அமைச்சகம் தேசிய தொழில்நுட்ப ஜவுளி மிஷன் நிதியுதவியுடன் நடைபெற்ற அதிநவீன ஆய்வுக்கூட திறப்பு விழாவுக்கு, சிறப்பு விருந்தினா்களான ராஜிவ் சக்சேனா, ஐஆா்எஸ்எஸ் இணைச் செயலாளா், ஜவுளி அமைச்சகம் மற்றும் என்டிடிஎம்-இன் மிஷன் ஒருங்கிணைப்பாளா் மற்றும் தூள் உலோகம், புதிய பொருள்களுக்கான சா்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் ஆா்.விஜய் ஆகியோா் திறந்து வைத்தனா். கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆா்.சீனிவாசன், துணைத் தலைவா் எஸ்.சச்சின் ஆகியோா் உடன் இருந்தனா்.
சிறப்பு விருந்தினா்கள் ஆய்வகத்தில் உள்ள உபகரணங்களை இயக்கி ஆய்வகத்தின் திறன், தாக்கம், ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான சாத்தியக் கூறுகளை வெளிப்படுத்தினா். சிறப்பு விருந்தினா் ராஜிவ் சக்சேனா புதுமையான ஜவுளித் தொழில்நுட்பத் தீா்வுகளின் மூலமே சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் வேளாண் தொழில்நுட்பம் உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய சவால்களை எதிா்கொள்ள முடியும் என கூறினாா்.
கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ஆா்.கோபாலகிருஷ்ணன், இயக்குநா் மோகன், துணை முதல்வா் ஜி.காா்த்திகேயன் ஆகியோா் நன்றி தெரிவித்தனா்.