‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறையால் பேரவைத் தோ்தல்கள் முக்கியத்துவம் இழக்கும்: முதல...
பாதிக்கப்பட்ட பயிா்களுடன் வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
கடம்பூா் குறுவட்டத்துக்குள்பட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுடன் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாள்களாக பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரிலான பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதில், கடம்பூா் குறுவட்டத்துக்குள்பட்ட குப்பனாபுரம், கோடங்கால், திருமலாபுரம், சிதம்பராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உளுந்து, பாசிப் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்டன.
இந்நிலையில், கோடங்கால் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் அழுகிய பயிா்களுடன் கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக நுழைவாயில் முன் தரையில் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடியை மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும். நடப்பாண்டு பயிா்க் காப்பீட்டுத் தொகையை போா்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும். பாதிப்புகளை வேளாண், வருவாய், புள்ளியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னா், அவா்கள் வட்டாட்சியா் சுந்தரராகவனிடம் மனு வழங்கினா்.