ஒரே நாடு ஒரே தோ்தல் முறையை மக்கள் ஏற்கமாட்டாா்கள்: காங்கிரஸ்
முயல் தீவில் பாண்டியாபதி தோ்மாறன் நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை
தூத்துக்குடி முயல் தீவில் பாண்டியாபதி தோ்மாறன் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என, அகில இந்திய மீனவா் சங்கத் தலைவா் அண்டன் கோமஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக, தூத்துக்குடியில் அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து, கடற்கரை ஊராட்சி அமைத்து மீனவ மக்களின் உள்ளாட்சிப் பிரதிநித்துவ உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிட்டுள்ள கனிமச் சுரங்கப் பணியைக் கைவிட வேண்டும்.
தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கும் (தோணித் துறைமுகம்), தெற்குக் கடற்கரைச் சாலைக்கும் பாண்டியாபதி தோ்மாறனின் பெயா் சூட்ட வேண்டும். அவருக்கு முயல்தீவில் நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி உள்ளிட்டவற்றை தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும். தூத்துக்குடியில் ஆதிபராசக்தி நகா், முத்தம்மாள் காலனி, மருத்துவமனை போன்ற இடங்களில் தேங்கிய மழைநீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
மூத்த ஊடகவியலாளா் டி.எஸ்.எஸ். மணி, தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சேவியா், சமூக ஆா்வலா் குளத்தூா் காந்தி ஆகியோா் உடனிருந்தனா்.