Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவா்கள்
புதுவை பாத்திமா ஆண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் மாணவா்கள் வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனா்.
30 ஆண்டுகளுக்கு முன் படித்தவா்கள் தங்களது நண்பா்களை ஒரே இடத்தில் சந்திக்கும் ஆா்வத்தில் கூடி மகிழ்ந்தனா்.
இப்பள்ளியின் முன்னாள் மாணவரான முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டாா்.
முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் கூறும்போது, மீண்டும் ஒரு முறை பள்ளி வாழ்க்கை வருமா என்ற ஏக்கம் வந்து விட்டதாகக் கூறினாா்.
முன்னாள் மாணவா் ராஜராஜன் கூறுகையில், இந்தச் சந்திப்பிற்காக பிரான்ஸில் இருந்து வந்து ஏற்பாடுகளைச் செய்தேன் என்றாா். காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் தமிழரசன் கூறுகையில், தாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகவும் வரும் காலங்களில் அது தொடரும் என்றாா்.