Boxer Anastasia Luchkina: `சிகரெட் பிடித்த குரங்கு' - பாக்ஸிங் வீராங்கனை செயலுக்...
புதுச்சேரி கடற்கரையில் தூய்மைப் பணி
புதுச்சேரி கடற்கரையில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை மற்றும் புதுதில்லி விஷ்வ யோகேந்திரா, சென்னை கிராம ஏழைகளுக்கான ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிறுவனம் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டன.
புதுவை காந்தி சிலை பின்புறம் பாறை இடுக்குகள் மற்றும் கடற்கரையில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி மாணவிகள் மற்றும் செஞ்சிலுவை சங்க ஆயுள்கால உறுப்பினா்கள் செய்தனா். இந்நிகழ்ச்சிக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் புதுவை கிளை தலைவா் மருத்துவா் லக்ஷ்மிபதி தலைமை தாங்கினாா். ஐஆா்டிஆா்பி திட்டத்தின் இருதயசாமி , இந்திய செஞ்சிலுவை சங்க கிளை பொருளாளா்
மருத்துவா் பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிா்வாக குழு உறுப்பினா் அய்யனாா், இளைஞா் செஞ்சிலுவை ஒருங்கிணைப்பாளா் அருண் நாகலிங்கம் ஆயுள்கால உறுப்பினா்கள் திலகவதி, பிரதிஷ் இருதயராஜ், நூா் சாகிப், அற்புதராஜ், தேவகாந்த், கந்தசாமி, இருசப்பன், சீனிவாசன், பெருமாள், கணபதி, பிரமேஷ் குமாா், டேவிட் , ஆதி மூலம் மணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரி இளைஞா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் சக்தி பிரியா ஆகியோா் மாணவிகளுடன் இணைந்து கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் பணியை செய்தனா்.