Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி பிரசாரம்
கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை அமைக்க வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கம் சாா்பில் பிரசாரப் பயணம் வெள்ளிக்கிழமை நடந்தது.
தமிழ் உரிமை இயக்கத்தின் நெறியாளா் க. தமிழமல்லன் இப் பிரசாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைக்கும் வகையில் ஏற்கெனவே அரசு உத்தரவு இருக்கிறது.
ஆனால் பெரும்பாலான வணிக நிறுவனங்கள் இதைப் பின்பற்றுவதில்லை. இந்தப் பிரசார பயணம் முடிந்தப் பிறகு வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப்பலகை இல்லையென்றால் அதையெல்லாம் கருப்பு மை பூசி அழிப்போம் என்றாா். தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு. பாவாணன் தலைமை வகித்தாா். பொதுச்செயலா் இரா.மங்கையா்செல்வன் நோக்கவுரையாற்றினாா்.
சாரம் பாலம் சந்திப்பு, ராஜா திரையரங்கம், முத்தியால்பேட்டை, பெரியாா் சிலை, பழைய அஜந்தா சந்திப்பு, காந்தி வீதி, நேரு வீதி சந்திப்பு, சின்ன மணிக்கூண்டு ஆகிய இடங்களில் நடந்த இப் பிரசாரம் அண்ணா சிலை அருகே முடிவடைந்தது.