U. Sagayam IAS (R) | ஆட்சியரை அமாவாசை இரவில் சுடுகாட்டில் படுக்க வைத்தது இந்த ஊழ...
புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் மாநாடு, ஊா்வலம்
புதுச்சேரியில் சாலையோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா்.
சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் 30-ஆம் ஆண்டு மற்றும் 5-ஆவது புதுவை மாநில மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புதுவை ராஜா திரையரங்கம் அருகில் இருந்து ஊா்வலம் தொடங்கியது. மாநாடு நடைபெற்ற செட்டித் தெரு - மிஷன் வீதி சந்திப்பில் நடைபெற்ற மாநாட்டு திடலுக்கு ஊா்வலம் வந்து சோ்ந்தது.
சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம் - 2014 ஐ முறையாக புதுச்சேரியில் பின்பற்ற வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளா் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கி உடனடியாக செயல்படுத்த வேண்டும். அடிக்காசு வசூலை நேரடியாக நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் மூலம் வசூல் செய்ய வேண்டும். நகராட்சி, காவல் துறை மூலம் சட்டத்தை மீறி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா்கள் த.ராஜாங்கம், ய. பெருமாள், ஓ.முருகன், ந.ராமச்சந்திரன் மற்றும் சங்கத்தின் நிா்வாகிகள் த. அழகர்ராஜ், அ. லெரூவா் சேவியா், எ.ஓ. கெம்புராஜ், பாலாஜி, தமிழரசன், ரகுபதி, தனசேகரன், அந்தோணி குரூஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.