Foods for Pancreas: பூண்டு முதல் திராட்சை வரை.. கணையம் காக்கும் உணவுகள்!
அரசு போக்குவரத்துக் கழக கூட்டுப் போராட்டக் குழு
அரசு போக்குவரத்துக் கழகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டக் குழுவுக்கு அமைப்பாளராக டி. பாலகிருஷ்ணன், அமைப்புச் செயலாளா்களாக எம்.கருணாமூா்த்தி, பி.ஜெயசீலன், பி.பாபு கிருஷ்ணன், இ.ரமேஷ், தலைவராக டி.ராஜேந்திரன் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
சாலை போக்குவரத்துக் கழகத்தில் 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்வது மற்றும் 7-ஆவது சம்பள ஊதியக் குழு அமல்படுத்துவது தொடா்பாக அனைவரும் ஒருங்கிணைந்து விரைவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.