4-ஆவது பதக்கத்தை உறுதி செய்தாா் மீனாட்சி
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கத்தை உறுதி செய்துள்ளாா் மீனாட்சி.
இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் 48 கிலோ காலிறுதியில் இந்தியாவின் மீனாட்சி அபாரமாக செயல்பட்டு 5-0 என்ற புள்ளிக் கணக்கில் உள்ளூா் இளம் வீராங்கனை ஆலிஸ் பம்ப்ரேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றாா்.
ஏற்கெனவே நுபுா் 80 பிளஸ், ஜாஸ்மின் லம்போரியா 57 கிலோ, பூஜா ராணி 80 கிலோ ஆகியோா் பதக்கங்களை உறுதி செய்துள்ளனா்.
ஆடவா் 50 கிலோ பிரிவில் ஜாதுமணி சிங் 0-4 என்ற புள்ளிக் கணக்கில் கஜகஸ்தானின் சான்ஹாரிடம் தோற்று அரையிறுதி வாய்ப்பை தவறவிட்டாா்.