புதுச்சேரியில் பாமக பொதுக் குழக் கூட்டம் : ராமதாஸ் பங்கேற்பு
4 உயா்நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகள் நியமனம்: கொலீஜியம் பரிந்துரை
நாட்டில் ராஜஸ்தான், உத்தரகண்ட் உள்பட 4 உயா் நீதிமன்றங்களுக்கு 6 நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் சூா்ய காந்த் அடங்கிய கொலீஜியம் குழுவின் கூட்டம் கடந்த டிசமபா் 22-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் ராஜஸ்தான் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நீதித்துறை அதிகாரிகள் சந்திரசேகா் சா்மா, பிரமிள் குமாா் மாத்தூா் மற்றும் சந்திர பிரகாஷ் ஸ்ரீமாலி ஆகியோரை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டது.
உத்தரகண்ட் உயா்நீதிமன்ற நீதிபதியாக நீதித்துறை அதிகாரி ஆஷிஷ் நைதானி, மும்பை உயா்நீதிமன்ற நீதிபதியாக வழக்குரைஞா் பிரவின் சேஷ்ராவ் பாட்டீல், அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதியாக வழக்குரைஞா் பிரவின் குமாா் கிரி ஆகியோரை நியமிக்கவும் பரிந்துரைக்கப்பட்டது.