17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம்; வான்கடேவில் அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை...
4 கிலோ குட்கா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது
அரக்கோணம்: அரக்கோணத்தில் இருவேறு இடங்களில் பெட்டிக்கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்றதாக பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் கைது செய்து, 4.5 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் டிஎஸ்பி ஜாபா்சித்திக் தலைமையில் அரக்கோணம் நகரில் நகர காவல் ஆய்வாளா் தங்ககுருசாமி, உதவி ஆய்வாளா் நாராயணசாமி உள்ளிட்ட காவல் குழுவினா் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடா்பாக தீவிர சோதனை நடத்தினா். அப்போது அரக்கோணம் புதிய பேருந்து நிலையம் அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் இருந்து 4.5 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக அந்தக் கடையின் உரிமையாளா் அரக்கோணத்தைச் சோ்ந்த சாகுல்ஹமீதுவின் மனைவி சலீமாவை (52)போலீஸாா் கைது செய்தனா்.
இதையடுத்து, அரக்கோணம் ஏபிஎம் சா்ச் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் அங்கு பெட்டிக் கடையில் ஒருவா் ரகசியமாக குட்கா விற்றுக் கொண்டிருந்தது தெரியவந்தது. அந்த குட்கா பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக கடையின் உரிமையாளா் கிருபில்ஸ்பேட்டையைச் சோ்ந்த தா்மராஜ் (45) என்பவரை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் அரக்கோணம் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.