செய்திகள் :

40 வயதிலும் பந்தினை பாய்ந்து பிடித்த டு பிளெஸ்ஸி: டிஎஸ்கே த்ரில் வெற்றி!

post image

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் டி20 கிரிக்கெட்டில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் எம்எல்சி (மேஜர் லீக் கிரிக்கெட்) தொடரில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் எம்ஐ நியூயார்க் இன்னிங்ஸும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த டிஎஸ்கே 185 / 6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டெவான் கான்வே 44 பந்துகளில் 65 ரன்களும் சவேஜ் 34 பந்துகளில் 53 ரன்களும் எடுத்தார்கள்.

கேப்டன் டு பிளெஸ்சிஸ்18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து விளையாடிய எம்ஐ நியூயார்க் இன்னிங்ஸ் 20 ஓவர்களில் 182/8 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இதில் அதிகபட்சமாக மோனக் படேல் 62, மைக்கேல் பிரேஸ்வெல் 38 ரன்களும் எடுத்தார்கள்.

நிகோலஸ் பூரன் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியைத் தழுவினார்.

இந்தப் போட்டியின்போது அதிரடியாக விளையாடிய மைக்கேல் பிரேஸ்வெல் அடித்த பந்தினை டு பிளெஸ்ஸி தாவிப் பிடிப்பார். இது போட்டியில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.

40 வயதிலும் டு பிளெஸ்ஸி பிடித்த கேட்ச்சை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் தோல்வி; ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணியின் டாப் ஆர்டரில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளு... மேலும் பார்க்க

சாபங்கள் நீங்கிய ஆண்டு: விளையாட்டு உலகின் பொற்காலமான 2025!

விளையாட்டு உலகில் இந்தாண்டு பொன்னான ஆண்டாக மாறியிருக்கிறது. முதல்முறை கோப்பைகளை பல அணிகள் வென்றுள்ளன. கிரிக்கெட், கால்பந்து ரசிகர்களுக்கு இந்தாண்டை மறக்கவே முடியாது. விளையாட்டு உலகின் பொற்காலமாக 2025 ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி 2023-25: பும்ராவை முந்திய பாட் கம்மின்ஸ்!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் டபிள்யூடிசி 2023-25-இல் அதிக விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென்னாப்பிரிக்க அணி வென்றது. 27 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்று அசத்... மேலும் பார்க்க

டெம்பா என்பதன் பொருள் என்ன தெரியுமா? டெம்பா பவுமா விளக்கம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திட... மேலும் பார்க்க

கேப்டனாக ஆதிக்கம் செலுத்தும் டெம்பா பவுமா!

டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

முதல் இன்னிங்ஸில் ஜீரோ, இரண்டாவது இன்னிங்ஸில் ஹீரோ; ஆட்ட நாயகன் மார்க்ரம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான உ... மேலும் பார்க்க