செய்திகள் :

48 ஆண்டுகள் மரண தண்டனைக் கைதிக்கு ரூ.12 கோடி இழப்பீடு!

post image

ஜப்பான் நாட்டில் 48 ஆண்டுகளாக மரண தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபருக்கு சுமார் ரூ.12 கோடி இழப்பீடு வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் ஐவாவோ ஹக்காமாட்டா (வயது 89), முன்னாள் குத்துச்சண்டை வீரரான இவர் கடந்த 1966 ஆம் ஆண்டு தான் வேலை செய்து வந்த நிறுவனத்தின் முதலாளி, அவரது மனைவி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து அவர்களது வீட்டில் கொள்ளையடித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்தக் குற்றம் நடைபெற்ற சுமார் ஓர் ஆண்டிற்குள் அவர்களது ரத்தம் படிந்த ஆடைகளை கண்டுபிடித்துள்ளதாகவும் ஹக்காமாட்டா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் காவல் துறையினர் கூறி இந்தக் கொலை வழக்கை முடிக்க முயற்சித்தனர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஹக்காமாட்டா அவர் நிரபராதி எனவும், காவல் துறையினர் அவரை சித்ரவதை செய்ததினால்தான் இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கூறியுள்ளார். ஆனால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், ஜப்பான் நாட்டில் மரண தண்டனை பெற்ற கைதிகளுக்கு அவர்களது தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும். இதனால், எப்போது தங்களது மரணம் வரும் என்று நாள்தோறும் பயத்திலேயே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஜப்பானின் நீதித்துறையை விமர்சித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஹக்காமாட்டா நிரபராதி என்றும் அவர் இந்த வழக்கில் குற்றவாளியென சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அவரது சகோதரி தொடர்ந்து மேற்கொண்ட பிரச்சாரங்களினால் சுமார் 48 ஆண்டுகள் கழித்து கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் மறுவிசாரணையில் கடந்த 2024 செப்டம்பர் மாதம் ஷிஸோகா மாவட்ட நீதிமன்றம் அவர் நிரபராதி எனவும் இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் ஆதாரங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் கூறி ஹக்காமட்டாவை விடுதலை செய்தது.

இந்நிலையில், தற்போது ஹக்காமடா முதுமையடைந்த தனது சகோதரியுடன் அவர்களது ஆதரவாளர்களின் உதவியுடன் வாழ்ந்து வரும் நிலையில், அவர் மீது தவறுதலாகக் குற்றம்சுமத்தப்பட்டு தனது வாழ்நாளின் 48 ஆண்டுகளை சிறையிலேயே கழித்ததினால் ஷிஸோக்கோ நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று அவருக்கு நிவாரணம் அறிவித்தது.

அதன்படி, அவர் சிறையில் கழித்த ஒவ்வொரு நாளுக்கும் சுமார் 12,500 ஜப்பானிய யென் வீதம் மொத்தம் 21,73,62,500 யென் (1.4 மில்லியன் அமெரிக்க டாலர்) அளவிலான பணம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.11. 9 கோடியாகும்.

ஆனால், இந்த பணமானது அவர் 48 ஆண்டுகளாக அனுபவித்த கொடுமைகளுக்கு இழப்பீடாகக் கருதப்படாது என்றும் அரசு செய்த தவறுகளை 200 மில்லியன் யென்கள் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என ஹக்காமட்டாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஐவாவோ ஹக்காமாட்டா ஜப்பானின் இரண்டாம் உலகப் போர் வரலாற்றுக்கு பிறகு மறுவிசாரணை வழங்கப்பட்ட 5-வது மரண தண்டனை கைதி ஆவார். மேலும், இவருக்கு முந்தைய 4 வழக்குகளிலும் மரண தண்டைப் பெற்ற கைதிகள் மறுவிசாரணையில் குற்றமற்றவர்கள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து டி20-யிலும் சிறப்பாக செயல்பட விரும்பும் ஆப்கன் வீரர்!

டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புவதாக ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்ஸாய் தெரிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய், கடந்... மேலும் பார்க்க

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் உரிமைத் தொகை! - தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டில் விடுபட்டோருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியத்திற்குள்பட்ட வெற்றிலைமுருகன்பட்டி, ... மேலும் பார்க்க

7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்வு: அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி,கன்னியாகுமரி,போளூர், செங்கம், சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 ... மேலும் பார்க்க

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி ஓட்டு கேட்க முடியாது! - துரைமுருகன்

பாஜக, மோடி என்றெல்லாம் சொல்லி இனி யாரும் இங்கு வாக்கு சேகரிக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ரூ. 4,034 கோடியை ... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

மியான்மர், தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை(மார்ச் 28) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்குள்ள தமிழர்களுக்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதவி தேவைப்படுவோர் - 1800 309 3793+91 80690 099... மேலும் பார்க்க

சமூக நீதியை நிலைநாட்டும் அரசு! - ஆதி திராவிடர், பழங்குடியினர் நலக் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்தும் பொருட்டு சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல... மேலும் பார்க்க