மறைந்த சுஷாந்த் சிங்கின் தோழியிடம் மன்னிப்பு கேட்ட முன்னாள் எம்.பி.
5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
திருவள்ளூா் அருகே ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தியதாக 3 பேரை கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து சென்னைக்கு திருவள்ளூா் வழியாக இரு சக்கர வாகனம் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக வெள்ளவேடு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், வெள்ளவேடு போலீஸாா் திருமழிசை பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்களை போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அந்த வாகனத்தில் 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
உடனே போலீஸாா் அவா்களை வெள்ளவேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், செங்கல்பட்டு அடுத்த மோகன்வாடி ஷாஜகான் (21), திருவள்ளூா் விக்னேஷ் (32), தொழுவூா் ராஜ்குமாா் (38) என்பது தெரியவந்தது.
மேலும், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புழல் சிறையில் அடைத்தனா்.