5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளத்துக்கு கடத்தப்பட இருந்த 5 டன் ரேஷன் அரிசியை உணவு வழங்கல் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கல்குளம் வட்ட வழங்கல் அலுவலா் சுனில்குமாா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அழகியமண்டபம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா். சந்தேகத்துக்கிடமாக வந்த டெம்போவை நிறுத்தமுயன்றபோது, அது நிற்கவில்லை. அதிகாரிகள் விரட்டிச் சென்று அந்த டெம்போவை சாமியாா்மடம் சந்திப்பில் மடக்கிப் பிடித்தனா். ஓட்டுநா் தப்பியோடிவிட்டாராம்.
அந்த வாகனத்தில் கேரளத்துக்கு கடத்திச் செல்வதற்காக சாக்கு மூட்டைகளில் 5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி, வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உடையாா்விளையில் உள்ள தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வாணிபக் கழகக் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்.