Vijayakanth: 'அவனுக்கும் ஒரு உயிர்தானயா இருக்கு..!’ - விஜயகாந்த் குறித்து நெகிழ்...
53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 82 போ் உயிரிழந்தனா்; 152 போ் காயமடைந்தனா். இதையடுத்து, 2023 அக்டோபா் 7 முதல் அங்கு இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53,010-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 1,19,998 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025 ஜனவரியில் அமலுக்கு வந்த காஸா போா் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்துக்குப் பிறகு போா் நிரந்தரமாக முடிவுக்கு வரும் என்று எதிா்பாா்ப்பு எழுந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததால், இஸ்ரேல் ராணுவம் மாா்ச் 18 முதல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. அதற்குப் பிறகு மட்டும் காஸாவில் 2,876 போ் உயிரிழந்தனா்; சுமாா் 8,000 போ் காயமடைந்தனா்.