செய்திகள் :

6 அடி 5 அங்குலம், 159 க்ளீன் ஷீட்டுகள்... மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த கோல்கீப்பர்!

post image

மான்செஸ்டர் சிட்டி அணியில் பிஎஸ்ஜியின் கோல்கீப்பர் கியான்லூய்கி டோனாரும்மா இணைந்துள்ளார்.

மான்செஸ்டர் சிட்டி அணியில் இவர் 2030 வரை விளையாட ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்தாலியைச் சேர்ந்த கியான்லூய்கி டோனாரும்மா (26 வயது) பிஎஸ்ஜியின் வெற்றிக்கு மிகுந்த பங்களிப்பை செய்தவராக இருக்கிறார்.

முதல்முறையாக சாம்பியன் லீக்கை பிஎஸ்ஜி அணி கடந்தமுறை வெல்ல இவர் பெரிதும் உதவினார்.

ஏசி மிலன் அணியில் 16 வயதில் இணைந்த டோனாரும்மா 250க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடி 206-இல் இத்தாலியன் சூப்பர் கோப்பை வென்று கொடுத்துள்ளார்.

ஐரோப்பாவிலிருந்து 2021-இல் பிரான்ஸுக்கு வந்து, பிஎஸ்ஜி அணியில் இணைந்து, 4 சீசனில் பல கோப்பைகளை வென்றுள்ளார்.

6 அடி 5 அங்குலம் இருக்கும் இவர் கடந்த சீசனில் 17, மொத்தமாக 159 க்ளீன் ஷீட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Manchester City are pleased to confirm the signing of Gianluigi Donnarumma from Paris Saint-Germain, subject to international clearance.

இயக்குநர் பிறந்த நாள்! ஜனநாயகன் மேக்கிங் விடியோ!

இயக்குநர் ஹெச். வினோத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, ஜனநாயகன் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியிடப்பட்டுள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் மற்றும் இயக்குநர் ஹெச். வினோத் ஆகியோர... மேலும் பார்க்க

அவளின் அழுகை ஒரு புயலைப் பற்றவைக்கும்: தனது புதிய படம் குறித்து நிவின் பாலி!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி நடித்துள்ள “பேபி கேர்ள்” திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. நடிகர் நிவின் பாலி - இயக்குநர் அருண் வர்மா ஆகியோர... மேலும் பார்க்க

ஹிந்தியிலும் நல்ல வரவேற்பு: லோகா படத்தைப் பாராட்டிய ஆலியா பட்!

லோகா திரைப்படம் குறித்து ஆலியா பட் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். இந்தப் படம் ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு செப்.4ஆம் தேதி வெளியானது. நடிகை கல்யாணி பிரியதர்ஷிணி நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்... மேலும் பார்க்க

அஜித் படத்தின் மீது இளையராஜா வழக்கு!

குட் பேட் அக்லியில் தனது பாடல்களை பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியாகி வசூலைக் குவித்த குட் ப... மேலும் பார்க்க

ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் வெளியீட்டுத் தேதி!

ஜீத்து ஜோசப் இயக்கிய ஆசிப் அலியின் மிராஜ் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மிராஜ் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார்.பிரபல மலையாள இயக்குநர... மேலும் பார்க்க