செய்திகள் :

``6 மாத ஆட்சியில் 5 போர்களை நிறுத்தினார்; நோபல் பரிசு கொடுக்கணும்'' - ட்ரம்ப் செயலாளர் சொல்வதென்ன?

post image

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மீண்டும் 'இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதலை நான் தான் நிறுத்தினேன்' என்று கூறி வருகிறார்.

இதை ஆரம்பத்தில் இருந்தே மறுத்து வருகிறது இந்திய அரசு.

தற்போது நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் கூட, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் இந்தக் கூற்றை மறுத்தனர். ஆனால், தற்போது, மீண்டும் ட்ரம்ப் 'நான் தான்' இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தினேன் என்று கூறியிருக்கிறார்.

மோடி - ட்ரம்ப்
மோடி - ட்ரம்ப்

நேற்று

நேற்று, ட்ரம்ப் ஒரு ரேடியோ நேர்காணலில், 'நான் ஐந்து போர்களை நிறுத்தியிர்க்கிறேன். அதில் 31 ஆண்டுகளாக காங்கோ மற்றும் ரூவாண்டா இடையே நடந்து கொண்டிருந்த போரும் ஒன்று. அந்தப் போரில் அதுவரை 7 லட்சம் மக்கள் இறந்திருந்தினர்.

ஆனால், அந்தப் போர் முடிவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஆனால், அதை நான் நிறுத்தி வைத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் ஐந்து போர்களில் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலும் ஒன்று.

நேற்று முன்தினம்...

நேற்று முன் தினமும், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த அணு ஆயுதப் போரை நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்

நோபல் பரிசு!

கடந்த வாரம், வெள்ளை மாளிகையில் செய்தி செயலாளர் கரோலின் லீவிட், "ட்ரம்ப் தனது ஆறு மாத ஆட்சிக்காலத்தில், மாதத்திற்கு ஒன்று என போர் நிறுத்தத்தையும், அமைதிக்கான ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளார்.

அதனால், அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

ஆக, ட்ரம்ப் திரும்ப திரும்ப இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் பற்றி கூறிவருவதற்கு நோபல் பரிசும் ஒரு காரணம்.

Russia: ``அணுசக்தி தொடர்பாக பேசும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்'' - ட்ரம்புக்கு பதிலளித்த ரஷ்யா

உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, `ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமைக்குள் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு... மேலும் பார்க்க

`இன்னும் வரியை உயர்த்துவேன்' - இந்தியாவை எச்சரிக்கும் ட்ரம்ப்; காரணம் என்ன?

உலக நாடுகளுக்கு அமெரிக்கா தற்போது விதித்து வரும் பரஸ்பர வரியில் 25 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறோம் என்று அபராதத் தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

இந்தியா - ரஷ்யா வணிகம்: ட்ரம்பின் புது எச்சரிக்கை; அமெரிக்காவை விளாசும் இந்திய அரசின் புள்ளிவிவரம்

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருவதால், அமெரிக்கா, இந்தியா மீது 25 சதவிகித வரியுடன் கூடுதலாக அபராதமும் விதித்துள்ளது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இற... மேலும் பார்க்க

``என்னுடைய கல்லறையை நானே தோண்டுகிறேன்'' - இஸ்ரேல் பணயக் கைதி கதறல்; நெதன்யாகு, ஹமாஸ் ரியாக்‌ஷன்?

"என்னுடைய கல்லறையை நானே தோண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும், என்னுடைய உடல்நிலை மோசமாகி கொண்டிருக்கிறது. என்னுடைய கல்லறைக்கு நானே நடந்துப்போகிறேன். என்னை விடுவிக்க வேண்டிய நேரமும், என்னுடைய குடும... மேலும் பார்க்க

`விருப்பத்துடன் பாலியல் உறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது?' - உங்கள் கருத்தென்ன? #கருத்துக்களம்

கடந்த மாத இறுதியில், மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், இந்தியாவில் சம்மதத்துடன் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வ வயது (தற்போது 18 வயது) குறித்து உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். அவர் முன்வைத்திருக்கும்... மேலும் பார்க்க

`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்

ட்ரம்பின் அமெரிக்க அரசு இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்துள்ளது. கூடுதலாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அதற்கும் அபராதத்தை விதித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில... மேலும் பார்க்க