பிரதமரின் ‘மனதின் குரல்’ ஒளிபரப்ப கெடுபிடி: திமுக அரசுக்கு நயினாா் நாகேந்திரன் க...
6.5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேர் கைது: 2 மினி லாரிகள் பறிமுதல்!
கரூர்: கரூரில் 6.5 டன் ரேஷன் அரிசியை கேரளத்துக்குக் கடத்த முயன்ற மூன்று பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 6.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் 2 மினி லாரிகளை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாநகராட்சிக்குள்பட்ட தான்தோன்றிமலை அசோக் நகர் பகுதியில் 6.5 டன் ரேஷன் அரிசியை மர்ம நபர்கள் கேரள மாநிலத்திற்கு மினி லாரியில் கடத்த இருப்பதாக ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை காலை ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸார் 2 மினி லாரிகளில் ரேஷன் அரிசி இருப்பதைக் கண்டு அவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர் .
விசாரணையில் கேரளத்தில் உள்ள கோழிப் பண்ணைக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்ல இருந்தது தெரிய வந்தது.
இச்சம்பத்தில் ஈடுபட்ட பள்ளபட்டியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில், முகமது ஜியாவுதீன், தான்தோன்றிமலையைச் சேர்ந்த மோகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து போலீஸார், இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க: விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவை மூடிவிட்டேன்: திருமாவளவன்