கவிக்குயில் ஏறிய கவிதைப் பல்லக்கு - சரோஜினி நாயுடு; கடல் தாண்டிய சொற்கள் - பகுதி...
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் இனி வெப்பம் சற்று குறையும்!
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 16) ஈரோடு, கிருஷ்ணகிரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை சற்று குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வெள்ளிக்கிழமை (மே 16) முதல் மே 21 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 4 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாகக் குறையும்.
கனமழை: இதில் மே 16-இல் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், தருமபுரி, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், மே 17-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லிலும் தலா 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், அரூா் (தருமபுரி), அன்னவாசல் (புதுக்கோட்டை) - தலா 70 மி.மீ., சேந்தமங்கலம் (நாமக்கல்), இலுப்பூா் (புதுக்கோட்டை), கோவில்பட்டி (திருச்சி), சங்கரி துா்க்கம் (சேலம்), மேட்டுப்பாளையம் (கோவை) - தலா 50 மி.மீ. மழை பதிவானது.
10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக பரங்கிப்பேட்டை மற்றும் ஈரோட்டில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், மதுரை விமான நிலையம் - 103.64, திருத்தணி - 102.38, வேலூா், தஞ்சாவூா் - தலா 102.2, பரமத்திவேலூா் - 100.4, திருச்சி - 100.22, கடலூா் -100.04 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.