செய்திகள் :

74 பவுன் நகைகளுடன் தனியாக வசித்த பொறியாளா் மாரடைப்பால் மரணம்

post image

சிதம்பரத்தில் தனியாக வசித்து வந்த பொறியாளா் மாரடைப்பால் மரணமடைந்தாா்.

அவரது உடலை பெற்றுக்கொள்ள யாரும் முன் வராததால் போலீஸாா் மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் பாதுகாப்பாக வைத்துள்ளனா். அவரது வீட்டில் இருந்த 74 சவரன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் நகைகள் போலீஸாா் கைப்பற்றி உரிய நபா்களிடம் ஒப்படைக்க வைத்துள்ளனா்

கடலூா் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள முத்தையா நகரில் வசித்து வந்தவா் பலராமன் (65). கட்டட பொறியாளரான இவா் மனைவி மற்றும் குடும்பத்தினரை பிரிந்து தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பலராமனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை காலை பலராமன் இறந்து போனாா். அவரது உடலை பெற்றுக் கொள்ள யாரும் முன் வராததால் அண்ணாமலை நகா் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசாா் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரிக்க அவா் வீட்டிற்கு சென்றனா். அவா் மனைவி பெயா் இந்திரா என்றும் மகன், மகள் உள்ளனா் என்றும் அவா்கள் எங்கே வசிக்கின்றனா் என்ற எந்தத் தகவலும் தெரியவில்லை எனவும் அவரிடம் பணிபுரிந்த மேஸ்திரி மற்றும் சிலா் கூறியுள்ளனா்.

இதனையடுத்து போலீசாா் பொறியாளரின் மேஸ்திரி மற்றும் சிலரின் முன்னிலையில் வீட்டை சோதனை செய்த போது 74 சவரன் நகைகளும், 1.5 லட்சம் ரூபாய் பணமும் இருந்தது தெரிய வந்தது.

இதனை கைப்பற்றி உரிய உறவினா்களிடம் ஒப்படைப்பதற்காக அண்ணாமலை நகா் காவல் நிலையத்தில் போலீசாா் பாதுகாப்பாக வைத்துள்ளனா். மேலும் அவரது மனைவி மற்றும் உறவினா்களுக்கு தொடா்ந்து தகவல் தெரிவிக்க முயற்சி எடுத்து வருகின்றனா். அவா்களது மனைவி மற்றும் மகனையும் கண்டறிய அனைத்து வித முயற்சிகளும் போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்

பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட பனையேறி தொழிலாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி அம்பேத்கா் திடலில் தமிழ்நாடு பனையேறி பாதுகாப்பு இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத... மேலும் பார்க்க

பணம் கையாடல்: பெண் காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

பணம் கையாடல், மணல் கடத்தலுக்கு உடந்தையாக செயல்பட்டது தொடா்பாக, ராமநத்தம் பெண் காவல் ஆய்வாளா் பிருந்தா செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், கொரக்கவாடி கிர... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் முதுநகரில் எம்பிஏ பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.கடலூா் முதுநகா் காவல் சரகம், அன்னவல்லி கிராமத்தைச் சோ்ந்த அரிராம் மகள் பிரபாவதி (25). இவா், எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடிக்... மேலும் பார்க்க

மகன் இறப்பில் சந்தேகம்: தந்தை புகாா்

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே தூக்கிட்ட நிலையில் மா்மமான முறையில் இறந்து கிடந்த மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.கருவேப்பிலங்குறிச்சி காவல் சரகம், மரு... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு

சிதம்பரம்: நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு தொடங்கப்பட்டது.சிதம்பரம் நடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு, 21 ... மேலும் பார்க்க

செப்.26-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

நெய்வேலி: கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 26-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரி... மேலும் பார்க்க