செய்திகள் :

+8, +85, +65 தொடங்கும் எண்களில் இருந்து அழைப்பா? மத்திய அரசு எச்சரிக்கை

post image

+91 என்று தொடங்கும் எண்கள் அல்லாமல், +8, +85, +65 போன்று தொடங்கும் சர்வதேச எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இணையவழி மோசடி: 135 வழக்குகளில் தொடர்புடைய இளைஞர் கைது

நாடு முழுவதும் டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அதற்கேற்ப மோசடிகளும் நாளுக்குநாள் புதுப்புது விதத்தில் உருவெடுத்து வருகின்றது.

தற்போது லேட்டஸ்ட்டாக சர்வதேச எண்களில் இருந்து ஒருவருக்கு தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அரசு அதிகாரிகளைப் போல் பேசி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில்,

”சர்வதேச எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகளைத் தடுக்கும் அமைப்பை அக்டோபர் 22 அன்று தொலைத் தொடர்புத் துறை அறிமுகம் செய்தது. அடுத்த 24 மணிநேரத்தில் 1.35 கோடி அழைப்புகள், அதாவது சர்வதேச எண்களில் இருந்து இந்திய எண்களை தொடர்பு கொண்ட 90 சதவிகிதம் அழைப்புகள் மோசடி அழைப்புகளாக அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சர்வதேச எண்களைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடும் முறையை கையாண்டு வருகிறார்கள். அதனால், அறிமுகம் இல்லாத சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் 'சஞ்சார் சாத்தி இணையதளம் மூலம் புகார் அளிக்க வேண்டும்.

+91 இல் தொடங்காமல் +8, +85, +65 போன்ற எண்களில் தொடங்கும் சர்வதேச எண்களிலிருந்து அழைத்து அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோன்ற அழைப்புகளை தடுப்பதற்காக தொலைத் தொடர்பு துறை பிரத்யேகக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.

தற்பொது ஏர்டெல் நிறுவனம் சர்வதேச எண்களில் இருந்து வரும் அழைப்புகளை சர்வதேச அழைப்பு என்று குறிப்பிடும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியுள்ளது. பிற நிறுவனங்களும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றன” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மோசடி அழைப்புகள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு ‘காலர் ட்யூன்’ மற்றும் குறுஞ்செய்தி மூலம் விழிப்புணர்வு அளிக்க தொடங்கியுள்ளனர்.

பிஎம்டபிள்யூ காரை விரும்பாத மன்மோகன் சிங்! - பாஜக அமைச்சர் பகிர்ந்த தகவல்!

பிரதமராக இருந்தபோதும் மன்மோகன் சிங் மிகவும் எளிமையாகவே இருந்தார். அதற்கு எடுத்துக்காட்டான ஓர் நிகழ்வை உத்தரப் பிரதேச மாநில பாஜக அமைச்சரான அசிம் அருண் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதிநவீன பிஎம்டபி... மேலும் பார்க்க

மன்மோகன் சிங்கின் வாழ்க்கை தலைமுறையினருக்குப் படமாக அமையும்: பிரதமர் மோடி

மறைந்த பிரதமர் மன்மோகன் சிங்கின் மரணம் தேசத்திற்கு ஒரு பெரிய இழப்பு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில... மேலும் பார்க்க

அமைதியான பிரதமரா? - மன்மோகன் சிங் கூறிய பதில் என்ன?

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்(92) வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார். தில்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சைப்... மேலும் பார்க்க

நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தடம் பதித்தவர் மன்மோகன் சிங்: சித்தராமையா

மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய முத்திரையைப் பதித்துள்ளதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் (92)உடல்ந... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெள்ளிக்கிழமை நேரில் அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் மறைவு: ஹிமாசலில் அரசு அலுவலகங்களுக்கு 2 நாள்கள் விடுமுறை!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக ஹிமாசலப் பிரதேசத்தல் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் இரண்டு நாள்களுக்கு மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்க்க