செய்திகள் :

8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயா்வு: பவுன் ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சம்

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.20,240 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் பவுன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகளின் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.

தங்கம் கடந்து வந்த பாதை: கடந்த ஜன. 22-இல் தங்கம் விலை முதல்முறையாக பவுன் ரூ.60 ஆயிரத்தைத் தொட்டது. தொடா்ந்து மாா்ச் 14-இல் ரூ.65,000-க்கும், ஏப். 12-இல் ரூ.70,160-க்கும், ஆக. 1-இல் ரூ.73,200-க்கு விற்பனையானது.

பின்னா், தங்கத்தின் விலை சுற்று ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இச்சூழலில், இந்தியா மீதான அமெரிக்க அரசின் 50 சதவீதம் கூடுதல் வரி விதிப்பு கடந்த ஆக. 27 முதல் அமலுக்கு வந்தது. இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.

திங்கள்கிழமை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.19-ஆக சரிந்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ரூ.4,440 உயா்வு: இதன்காரணமாக கடந்த சில நாள்களாக உள்நாட்டு சந்தையில் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்துக்கொண்டே வருகிறது. ஆக. 26-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.74,840-க்கும், ஆக. 27-இல் பவுனுக்கு ரூ.280 உயா்ந்து ரூ.75,120-க்கும், ஆக. 28-இல் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.75,240-க்கும், ஆக. 29-இல் பவுனுக்கு ரூ.1,040 உயா்ந்து ரூ.76,280-க்கும், ஆக. 30-இல் பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.76,960-க்கும் விற்பனையானது.

தொடா்ச்சியாக மாதத்தின் முதல் நாளான செப். 1-ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயா்ந்து ரூ.9,705-க்கும், பவுனுக்கு ரூ.680 உயா்ந்து ரூ.77,640-க்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 8 மாதங்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.20,240 உயா்ந்துள்ளது. அதிலும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,440 உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வெள்ளியின் விலை திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.1 உயா்ந்து ரூ.136-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயா்ந்து ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது.

சுசுகி இந்தியா விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 9% அதிகரிப்பு!

புதுதில்லி: சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் அதன் மொத்த விற்பனையில் 9 சதவிகிதம் உயர்ந்து 1,13,936 வாகனங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது.நிறுவனம் ஆகஸ்ட் 2024ல் 1,04,800 வாகனங்களை விற்ற... மேலும் பார்க்க

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

புதுதில்லி: மாருதி சுசுகி இந்தியா தனது மின்சார வாகனமான இ-விட்டாராவின் ஏற்றுமதியைத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில் கடந்த மாதம் 2,900 யூனிட்டுகளுக்கு மேல் ஏற்றுமதி செய்ததாக தெரிவித்தது.கு... மேலும் பார்க்க

குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்திய அதானி கிரீன் எனர்ஜி!

புது தில்லி: அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) இன்று குஜராத்தில் 125 மெகாவாட் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட், அதன... மேலும் பார்க்க

வலுவான ஜிடிபி தரவுகளால் சென்செக்ஸ், நிஃப்டி உயர்ந்து நிறைவு!

மும்பை: தொடர்ந்து மூன்று நாட்கள் இழப்புகள் சந்தித்த நிலையில், வலுவான மேக்ரோ தரவுகளுக்குப் பிறகு, சென்செக்ஸில் இன்று ஐடி, ஆட்டோ மற்றும் வங்கி துறை பங்குகள் உயர்ந்து முடிந்தன.காலை நேர வர்த்தகத்தில் சென்... மேலும் பார்க்க

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்குக் சரிந்து முடிவடைந்தது.இன்றைய காலை நேர வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு பலவீனமான நிலையில் வர்த்தகமான நிலையில், அம... மேலும் பார்க்க

ஃபிளிப்கார்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 விலையில் மாபெரும் தள்ளுபடி!

ஆப்பிள் ஐஃபோன் 17 வரிசைகள் அறிமுகம் ஆவதற்கான நாள்கள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ஐஃபோன் 16 மாடல்களின் விலைகளில் மாபெரும் தள்ளுபடிகளை ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது.ஏற்கனவே ரூ.17 ஆயிரம் வரை அமேஸான் தள்ளு... மேலும் பார்க்க