கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
AA22 x A6: அல்லு அர்ஜூன் அட்லி இணையும் `AA22' பட அப்டேட் வெளியானது
புஷ்பா படத்தின் முதல் பாகத்தின் வசூல் வெற்றியை அடுத்து வெளியான இரண்டாம் பாகமும் வசூலைக் குவித்து கவனம் ஈர்த்திருந்தது. படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி ரூ.1500 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் டாப் ஸ்டார் பட்டியலில் கொடியைப் பறக்கவிட்டார் அல்லு அர்ஜுன்.

கோலிவுட்டிலிருந்து பல இயக்குநர்கள் பாலிவுட்டிற்குச் சென்று வெற்றி வாகை சூடியிருக்கின்றனர். அந்தவரிசையில் அட்லியும் கோலிவுட்டிலிருந்து பாலிவுட்டிற்கு சென்று தனது முதல் படமாக ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்தார். அந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
இப்படி ஆயிரம் கோடிகளில் வசூல்கள் படங்களைக் கொடுத்து இன்றைய திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லி இருவரும் இணைந்துள்ளனர். அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார்.

இப்படத்தில் இருவரின் சம்பளமும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக திரைவட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றன. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இபடத்தின் பட்ஜெட்டும் ரூ.500 கோடியைத் தாண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இன்று அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் அல்லு அர்ஜுன் நடிக்கும் 22-வது படமும், அட்லி இயக்கும் 6 -வது படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது.
Gear up for the Landmark Cinematic Event⚡✨#AA22xA6 - A Magnum Opus from Sun Pictures@alluarjun@Atlee_dir#SunPictures#AA22#A6pic.twitter.com/MUD2hVXYDP
— Sun Pictures (@sunpictures) April 8, 2025
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
