செய்திகள் :

AIPOC: அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடு; வெளிநடப்பு செய்த அப்பாவு! - காரணம் என்ன?

post image

1921-ம் ஆண்டு முதல் நடந்துவரும் அனைத்திந்திய சட்டப்பேரவை தலைவர்கள் மாநாடின் (AIPOC) 85-வது மாநாடு பீகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா, மாநில நாடாளுமன்ற விவகார அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி, பீகார் சட்டப்பேரவை தலைவர் நந்த் கிஷோர் யாதவ், சட்டமன்ற துணை தலைவர் நரேந்திர நாராயண் யாதவ், பீகார் மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை தலைவர்கள், பீகார் மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, துணை தலைவர் கு.பிச்சாண்டி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். அப்போது மாநாட்டில் உரையாற்றிய அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவையை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிப்பதாக பேசினார். உடனே மாநிலங்களவை துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு, `ஆளுநர் குறித்து இங்குப் பேச அனுமதியில்லை. மேலும், ஆளுநர் குறித்து அப்பாவு பேசியவை பதிவாகாது' எனத் தெரிவித்திருக்கிறார். இதனால், அதிருப்தியடைந்த தமிழ்நாட்டின் சபாநாயகர் அப்பாவு, ``ஆளுநர் சட்டப்பேரவையை அவமதித்தது குறித்து இங்கு பேசாமல் வேறு எங்கு பேசுவது" எனக் கூறி அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார்.

TVK : 'கெடுபிடி போலீஸ்; ஆதங்கத்தில் மக்கள்; ஸ்கோர் செய்த விஜய்' - பரந்தூர் விசிட் ஸ்பாட் ரிப்போர்ட்

தமிழக வெற்றிக் கழக தலைவரான விஜய் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடிய போராட்டக்குழுவை சந்தித்து பேசியிருக்கிறார். பரந்தூர் அருகே பொடவூர் என்கிற கிராமத்திலுள்ள தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பு... மேலும் பார்க்க

கனடாவின் அடுத்த பிரதமர் யார்? - வரிசைகட்டும் ‘தலை’களும் தலைவலிகளும்!

ஜஸ்டின் ட்ரூடோ விலகல்..!9 ஆண்டுகள் கனடாவின் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்தார். உட்கட்சி பிரச்னை, ஊழல் புகார்கள், இந்தியா, அமெர... மேலும் பார்க்க

கிம் ஜாங் உன் நலமா? - நக்கலாக விசாரித்த டொனால்ட் ட்ரம்ப் - இனி வட கொரியா என்னவாகும்?

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றப் பின் தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவத்தினரிடம் பேசிய டொனால்ட் ட்ரம்ப், நக்கலான தொனியில், "கிம் ஜாங் உன் நலமாக இருக்கிறாரா?" என்று விசாரித்தார். என்ன நடந்தது?தென் கொர... மேலும் பார்க்க

'புஸ்ஸி ஆனந்தை மட்டும் வைத்துக்கொண்டு விஜய் ஒன்னும் பண்ண முடியாது' - எஸ்.வி.சேகர் சொல்வதென்ன?

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வி.சேகர் பேசியிருக்கிறார்.பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெக தலைவர் விஜய் நேற்று( ஜனவரி 20) போராட்டம் நடத... மேலும் பார்க்க

`உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்’ - பதவியேற்ற 8 மணிநேரத்தில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து

47-வது அதிபராக...அமெரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அம... மேலும் பார்க்க

IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சென்னை IIT இயக்குநர் காமகோடி சில நாட்களுக்கு முன்பு மாட்டுப்பொங்கல் விழாவில் பசுவின் கோமியம் ஆண்டி-பாக்டீரியல் என்றும் அதன் மருத்துவ குணம் பற்றியும் பேசியிருந்தது பெரும் விவாதமாக எழுந்துள்ளது. நாட்டின... மேலும் பார்க்க