செய்திகள் :

Ajith: ``ஒரு குற்றவுணர்ச்சியால் தான் `நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்தேன்!'' - அஜித் ஓப்பன் டாக்

post image

அஜித் நடித்திருந்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கடந்த திங்கட்கிழமை ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவரிடமிருந்து அஜித் பத்ம பூஷன் விருதைப் பெற்றார். இதைத் தொடர்ந்து பல ஊடகங்களுக்கும் பேட்டி அளித்திருக்கிறார் அஜித்.

Ajith - Nerkonda Paarvai
Ajith - Nerkonda Paarvai

அப்படி 'இந்தியா டுடே' ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் 'பிங்க்' படத்தை ரீமேக் செய்ததற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார். அந்தத் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பேசத் தொடங்கிய அஜித், "நான் 'பிங்க்' திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ததற்குக் காரணம் இருக்கிறது. 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்திற்கு முந்தைய என்னுடைய சில படங்கள் என்னைக் குற்றவுணர்ச்சியடையச் செய்தன. பெண்களை ஸ்டாக்கிங் செய்வது போன்ற விஷயங்களை என்னுடைய திரைப்படங்கள் ஊக்குவிப்பது போலத் தோன்றியது.

வில்லன்கள் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்யும்போது கதாநாயகன் சென்று அவர்களைக் காப்பாற்றுவது, காதல் என்கிற பெயரில் கதாநாயகன் கதாநாயகிகளைத் தொந்தரவு செய்வது போன்ற சித்தரிப்புகள் என்னுடைய படங்களில் தொடர்ந்திருக்கின்றன.

Good Bad Ugly
Good Bad Ugly

நாங்கள் திரையில் செய்யும் விஷயங்களைத்தான் மக்கள் பின்பற்ற நினைப்பார்கள். நான் முந்தைய திரைப்படங்களில் செய்த தவறுகளைச் சரிசெய்வதற்கு 'பிங்க்' திரைப்படம் ஒரு வழியாக இருந்தது. அத்திரைப்படத்தை நான் ரீமேக் செய்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

நான் இப்போது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். இதே நிலைப்பாட்டிலிருக்கும் தயாரிப்பாளர்களையும் இயக்குநர்களையும் சந்திப்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். நான் எப்போது ஓய்வை அறிவிப்பேன் என்பதைத் திட்டமிட முடியாது. நான் ஓய்வை அறிவிக்கும் சூழலுக்கு ஒருவேளை தள்ளப்படலாம்." எனக் கூறினார்.

STR 49: `கல்லூரி மாணவராக சிம்பு!' - பூஜையுடன் தொடங்கிய சிம்புவின் 49-வது படம்

சிம்புவின் 49-வது திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியிருக்கிறது. சிம்புவுடன் கயாடு லோகர், விடிவி கணேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.இவர்களை தாண்டி படத்தில் சிம்புவுடன் சந்தானமும்... மேலும் பார்க்க

மும்பை 'வேவ்ஸ் 2025' மாநாட்டில் நடப்பது என்ன? - விவரிக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

வேவ்ஸ் உச்சி மாநாடு 2025 ( World Audio Visual and Entertainment Summit) என்று சொல்லப்படும் உலக ஆடியோ விஷுவல் மற்றும் என்டர்டெயின்மென்ட் உச்சி மாநாடு மும்பையில் நடைபெற்று வருகிறது. கடந்த 1-ம் தேதி தொடங... மேலும் பார்க்க

``நடிகராக இருக்கவே தகுதியற்றவர்" - யோகிபாபு குறித்து தயாரிப்பாளர் ராஜா விமர்சனம்

யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் 'கஜானா'. போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்... மேலும் பார்க்க

`ஸ்கிரிப்டை படித்த பா.ரஞ்சித், நானே..!’ - திரைப்படமாகும் பெருமாள் முருகனின் 'கூளமாதாரி' நாவல்

எழுத்தாளர் பெருமாள்முருகனின் 'கூளமாதாரி' நாவல் திரைப்படமாக உருவெடுக்கிறது. அவரது முக்கியமான நாவலான கூளமாதாரி சினிமாவாக மாற்றம் பெறுவது பற்றி பெருமாள் முருகனிடம் பேசினோம்.பா.ரஞ்சித்என்னுடைய தேர்வு அதுத... மேலும் பார்க்க