செய்திகள் :

Ananda Vikatan Cinema Awards 2024: "ஜமா படம் எடுக்றப்போ பயந்தேன்; ஆனா..!" - பாரி இளவழகன்

post image

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக, நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் இன்று சென்னையில் நடைபெறுகிறது.

`சேது' மாதிரியான படங்களோட தலையெழுத்தையே விகடன் விமர்சனம் மாற்றியிருக்கு.!

2024-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகர் விருது ஜமா படத்தின் இயக்குநரும், நடிகருமான பாரி இளவழகனுக்கு, இயக்குநர் ஏ.எல். விஜய் வழங்கினார்.

விருதை வழங்குகையில் பேசிய ஏ.எல். விஜய், "விகடன் விருதுங்கறது நீட் எக்ஸாம் மாதிரி. எல்லாமே மெரிட்லதான் இருக்கும்.

சில விருதுகள்தான் நம்ம வாழ்க்கையில ரொம்ப முக்கியம்னு சொல்வோம். வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் ஆனதுமே, ஆனந்த விகடன் மார்க் என்னன்னு எதிர்பார்த்து காத்திருந்திருக்கோம். அது, தனி எரா.

`சேது' மாதிரியான படங்களோட தலையெழுத்தையே விகடன் விமர்சனம் மாற்றியிருக்கு. அந்த அளவுக்கு ஆனந்த விகடன் விருது மெரிட் ஆன விஷயம்" என்று கூறினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பாரி இளவழகன், ``ஆனந்த விகடனுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கும் ஆனந்த விகடனுக்குமான தொடர்பு மிக நீண்டது.

இங்கே `ஆனந்த விகடன்' என்று சொல்வார்கள். ஊர்ல `ஆ.வி' என்றுதான் சொல்வார்கள். வெள்ளிக்கிழமை ஆனா `ஆ.வி வாங்கிட்டியா?' என்றுதான் கேட்பார்கள்.

தமிழ் மீதான என்னுடைய ஆர்வம் பேச்சுப் போட்டிகளிலிருந்து ஆரம்பித்தது.

அதற்கு ஆனந்த விகடனிலிருந்து ஏதாவது ஒரு பாயின்ட் எடுத்து, பேச்சுப் போட்டியில் பேசலாம் என்ற தொடர்பில் ஆரம்பித்து, இன்றைக்கு இந்த அவார்டு வாங்குறது, என்னைப் பொறுத்தவரைக்கும் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கிறேன்.

`ஜமா' படம் எடுத்தப்போ, இந்தக் கதையை எல்லார்கிட்டயும் சொல்லுறப்போ, இந்த சப்ஜெக்ட் எப்படிப் பொதுச் சமூகத்துகிட்ட போய்ச் சேரும் என்கிற மிகப்பெரிய பயம் இருந்தது.

இருந்தாலும், தமிழ் மக்கள் மேல எனக்குப் பெரிய நம்பிக்கை இருந்துச்சு. ராம் சார், சிவகார்த்திகேயன் சார் அவங்களா என்னைக் கூப்பிட்டு பாராட்டுனது இந்தப் படத்தை நிறைய கொண்டு போய் சேர்த்துச்சு.

எனக்குள்ள இருக்குற தாழ்வு மனப்பான்மை கேரக்டருக்காகவேதான் இந்த `கல்யாணம்' கேரக்டர் பண்ணினேன்.

அந்த கேரக்டரை எல்லாரும் அரவணைச்சுஒ ஏத்துக்கிட்டது எனக்கு ரொம்ப சந்தோஷம். நானும் ஒரு தெருக்கூத்துப் பையன்தான்கிற மாதிரி என்னை ஏத்துக்கிட்டாங்க.

ஆரம்பத்துல எனக்கு ஒரு பயம் இருந்துச்சு. ஏன்னா, ஒரு தெருக்கூத்து கலைஞர் கேரக்டர்ல நாம தப்பா பண்ணிட்டோம்னா, ஒரு கலையையே நாம தப்பா பணணுற மாதிரி ஆகிடும்.

பாரி இளவழகன்

அதனால மிகப்பெரிய பொறுப்பு என்கிட்ட இருந்துச்சு. பல மாவட்டங்கள்ல ஜமாவுல இருக்கறவங்க எனக்கு போன் பண்ணிப் பேசுனாங்க.

நேர்ல வந்து முத்தம் கொடுத்துப் பாராட்டினாங்க. இந்த விருதுகளையெல்லாம் தாண்டி, அந்த முத்தத்தை என்னோட பெரிய விருதாகப் பார்க்கிறேன்.

இந்த இடத்துல நான் நடிகனா நிக்கிறதுக்கு மிகப்பெரிய காரணம் என் மனைவி" என்று உணர்ச்சி பொங்கப் பேசினார்.

அதைத்தொடர்ந்து, சிறந்த படக்குழுவுக்கான விருதை `ஜமா' படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். இந்த விருதை இயக்குநர் பாலாஜி சக்திவேல் வழங்கினார்.

விருதை வழங்கிய பாலாஜி சக்திவேல், "விகடன்ல ஏற்கெனவே நானும் விருது வாங்கியிருக்கேன். என்னோட ரெண்டு படத்துக்கு நல்ல மார்க் போட்டுருக்காங்க. விகடன் விருது மிக பெருமைக்குரிய விருது" என்று கூறினார்.

விருதைப் பெற்றுக்கொண்ட படக்குழுவினர் சார்பில் பேசிய இயக்குநர் பாரி இளவழகன், ``இதுல நாமினேட் ஆனதுலயே இந்தக் குழுவைத்தான் சின்னக் குழுவா பாக்குறேன்.

இந்தக் குழுவுக்கு விருது அளித்ததற்கு மிகப்பெரிய நன்றி. இந்தப் படத்துல வொர்க் பண்ணின முக்கியமான ஒருத்தரை நாங்க மிஸ் பண்றோம்.

கலை சார்ந்த இந்தப் படத்துல, கலை இயக்கம் முக்கியமான பார்ட். அப்படி இந்தப் படத்தோட உயிரா வேலை செஞ்ச கலை இயக்குநர் ஸ்ரீகாந்த் கோபால் இப்போ இல்லை.

ஜமா படக்குழு
ஜமா படக்குழு

அவருக்கு இந்த விருதை டெடிகேட் பண்றோம். எங்களுக்கு இது ரெண்டாவது விருது. ஏன்னா ஏற்கெனவே சார் (பாலாஜி சக்திவேல்) கூப்பிட்டு மோதிரம் போட்டாரு.

அதைத்தான் `ஜமா'வுக்குக் கிடைத்த முதல் விருதா நான் பார்க்கிறேன். திருவண்ணாமலை தாங்கல் சேகர் அய்யாவுக்கும், அவரின் அம்பலவாணன் நாடக்குழுவுக்கும் நன்றி.

எங்களுக்கு ஏந்தல், அரசம்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் ரொம்ப உதவி செஞ்சாங்க. அவங்களுக்கு மனமார்ந்த நன்றி" என்று கூறினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Lokesh Kanagaraj: "மிடில் கிளாஸ் வாழ்க்கை கனக்ட் ஆனது" - மெட்ராஸ் மேட்னியை வாழ்த்திய இயக்குநர்!

காளிவெங்கட் நடிப்பில் கார்த்திகேயன் மணி இயக்கியுள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், மிடில் கிளாஸ் மக்களின் வாழ்க்கையை காட்சிபடுத்திய... மேலும் பார்க்க

'கேமராவை மெஷின்னு சொல்வாங்க!' – கொல்லங்குடி கருப்பாயி குறித்து நடிகர் ஆர்.பாண்டியராஜன்

நாட்டுப்புறப் பாடகி கொல்லங்குகுடி கருப்பாயி இன்று காலை காலமானார், வயோதிகப் பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த அவர் ‘ஆண் பாவம்’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.இந்த நிலையில்... மேலும் பார்க்க

பழம்பெரும் நடிகை, நாட்டுப்புற பாடகி கலைமாமணி விருது பெற்ற `கொல்லங்குடி கருப்பாயி' காலமானார்

நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப்பறந்த 'ஆண்பாவம்' படத்தில் நடித்த கொல்லங்குடி கருப்பாயி (99) காலமானார். மதுரை- தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நாட்டுப்புறப் பாடகி கருப்பாயி.... மேலும் பார்க்க

Vijay Sethupathi: " `வாத்தியார்' கதாபாத்திரம்... பெரிய வரமா நினைக்கிறேன்!" - நெகிழும் விஜய் சேதுபதி

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க

"நந்தன் கதையல்ல, நாம் காலம் காலமாக காணும் நிஜம்; ரஜினி சார் பார்த்துட்டு..!" - இரா. சரவணன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வ... மேலும் பார்க்க