செய்திகள் :

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

post image

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள அவர், கடந்த ஆண்டு வெளியான CTRL படத்துக்காக வெகுவாக பாரட்டப்பட்டார். இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள கேசரி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுவருகிறது.

Student of the year 2
Student of the year 2

இந்தத் தருணத்தில் சமீபத்தில் யூ-டியூப் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனன்யா பாண்டே, தான் கடந்து வந்த கடுமையான விமர்சனங்கள், ஏளனங்கள் பற்றி மனம் திறந்து உரையாடியுள்ளார்.

'மார்பகங்கள் இல்லை, பின்பக்கம் சதைப்பற்று இல்லை'

"நான் என் பயணத்தைத் தொடங்கும்போது எனக்கு 18-19 வயதிருக்கும். உங்களுக்குத் தெரியும் அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன், எல்லோருமே அதுகுறித்து கிண்டல் செய்தனர். 'ஓ... உனக்கு இருப்பது கோழி கால்கள், நீ தீக்குச்சி போல இருக்கிறாய், உனக்கு மார்பகங்கள் இல்லை, பின்புறம் சதைப்பற்று இல்லை' என முதலில் கிண்டல் செய்தனர். பின்னர், நான் வளர வளர இயற்கையாகவே என் உடல் (தசையால்) நிரம்பியது. இப்போதோ, 'இவளுக்கு எப்படி பின்புறம் வந்தது, எப்படி இது வந்தது அது வந்தது...' என்கின்றனர். இதில் நாம் வெல்லவே முடியாது" என்றார்.

மேலும் அவர், "நாம் எப்படி இருந்தாலும், எப்போதும் நம்மை விமர்சிக்க மக்களுக்கு எதாவது இருக்கும். குறிப்பாக பெண்களை விமர்சிக்க, ஆண்கள் இதனை அடிக்கடி எதிர்கொள்வதில்லை." என்றார்.

Ananya Pandey
Ananya Pandey

"பாலிவுட்டும் தான் காரணம்!" - Ananya Pandey

அத்துடன் அனன்யா யதார்த்தத்துக்கு சரிவராத அழகு தர-நிலைகளைக் கட்டமைத்ததற்காக பாலிவுட்டை குறைகூறினார்.

"நாம் நம்பமுடியாத அழகு தரநிலைகளை நிர்ணயித்ததனால் இது நம்முடைய தவறும் கூட என உணர்கிறேன்." என்றவர், ஒரு நடிகையாக தானும் பாடல்களிலும் திரைப்படங்களிலும் தவறானவற்றை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார். "இதையெல்லாம் எங்காவது சமநிலை செய்யவேண்டும்." என்றும் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் அதைப்பற்றி (Beauty Standards) பேச வேண்டும், அது உண்மையில்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும். நானும் அப்படி இல்லை. கேமராவுக்கு வெளியில் அழகு தரநிலைகளைப் பின்பற்றாமல் இருப்பதன்மூலம் அதை சமநிலைப்படுத்த விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

Marriage Dance: கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் சேர்ந்து வைரல் நடனமாடிய ஐஸ்வர்யா ராய்

மும்பையில் நடந்த திருமணம் ஒன்றில் அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராய் இருவரும் தங்கள் மகள் ஆராத்யாவுடன் கலந்துகொண்டனர். திருமணத்தில் பாடகர் ராகுல் வைத்யா இசை நிகழ்ச்சியை நடத்தினார். அப்பாடல்களை விரும்பிக்... மேலும் பார்க்க

சிதாரே ஜமீன் பர் படப் புறக்கணிப்பு விவகாரம்; தயாரிப்பு நிறுவன ப்ரொபைல் படத்தை மாற்றிய ஆமீர் கான்

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.இதற்கான வேலையில் ஆமீர் கான் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மத்திய அரசு பாகிஸ்தான் ஆக்... மேலும் பார்க்க

ஏ.ஆர்.ரஹ்மானும் ஹான்ஸிம்மரும் ராமாயணம் கதைக்கு இசையமைக்கிறார்களா? - தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதை திரைப்படமாக உருவாகவிருக்கிறது. இப்படத்தை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு 'ராமாயண்' என தலைப்பு வைத்து சமீபத்தி... மேலும் பார்க்க

Met Gala: ஹாலிவுட் பிரபலங்களை பின்னுக்குத் தள்ளிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான்..

அமெரிக்காவில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த `மெட் காலா' என்ற நிகழ்ச்சியில் பாலிவுட், ஹாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அங்கு நடந்த பேஷன் ஷோவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக கலந்து கொண்... மேலும் பார்க்க

`தங்கள் வாழ்க்கையைப் பணயம் வைத்து ராணுவ வீரர்கள் செயல்பட்டார்கள்' - பாராட்டி நெகிழும் ஆலியா பட்

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.இதனால் பாகிஸ்தான்... மேலும் பார்க்க

போர் பதற்றத்தைக் குறைக்கச் சொன்ன ஆலியா பட்டின் தாயார்; குடியுரிமை குறித்து நெட்டிசன்கள் கேள்வி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதலை நிறுத்தவேண்டும் என்று சொன்னவர்கள் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார்கள்.சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். நடிகர் சல்மான் கான் கூட போ... மேலும் பார்க்க