செய்திகள் :

Anirudh: "தோனி பக்கத்துல போய் பாடியிருக்கலாம்னு அனிருத் சொன்னார்" - பாடகர் யோகி சேகர்

post image

சென்னை மற்றும் மும்பை இடையேயான ஐ.பி.எல் போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.

இந்த சீசனில் சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டி இதுதான். முதல் போட்டியின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு நிகழ்வாக அனிருத்தின் இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்கள்.

அரங்கிலிருந்த பார்வையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக இந்த நிகழ்வை நடத்தியிருந்தார்கள்.

Anirudh at Chepauk
Anirudh at Chepauk

அனிருத்தின் மாஸ் பாடல்களின் இந்த பெர்ஃபாமென்ஸ் முடியும் வரை ரசிகர்களின் கரகோஷம் அரங்கம் முழுக்க நிறைந்திருந்தது.

எப்போதும் அனிருத்தின் இப்படியான லைவ் பெர்பாமென்ஸ்களில் பின்னணி பாடகர் யோகி சேகர் இருப்பார்.

இந்த நிகழ்வு குறித்து யோகி சேகரிடம் பேசினோம்.

நம்மிடையே பேசிய யோகி சேகர், `` நம்ம சென்னையில இதுக்கு முன்னாடி கான்சர்ட்ல பெர்ஃபார்ம் பண்ணியிருக்கோம். ஆனால், சேப்பாக்கத்துல பெர்ஃபார்ம் பண்ணணும்ங்கிறது என்னுடைய கோல்னு சொல்லலாம்.

சொல்லப்போனால், இது என்னுடைய வாழ்க்கையில ஒரு பக்கெட் லிஸ்ட். இப்போ அனிருத் ப்ரோகூட பெர்ஃபார்ம் பண்ணினது என் லைஃப் டைம் மொமன்ட் ஆகிடுச்சு.

`ஹுக்கும்', `Badass' பாடல்களையெல்லாம் நாங்க அங்க பெர்ஃபார்ம் பண்ணியிருந்தோம்.

Singer Yogi Sekar
Singer Yogi Sekar

அதுல முக்கியமாக, `Badass' பாடல் அப்போ தல தோனியோட என்ட்ரி ரொம்பவே ஸ்பெஷலான மொமன்ட். எனக்கு இப்போ அந்த தருணத்தை நினைச்சாலும் ஒரு மாதிரி எக்சைட் ஆகுது!

இந்த நிகழ்வு முடிஞ்சதுக்குப் பிறகு நான் அனி ப்ரோகிட்ட `ப்ரோ, தல தோனி நம்ம பின்னாடிதான் இருந்தார்'னு சொன்னேன்.

அதுக்கு அவர், `ஏன் யோகி அங்கேயே சொல்லியிருக்கலாம்ல தல பக்கத்துல போய் எதவாது பெர்ஃபார்ம் பண்ணியிருக்கலாம்'னு சொன்னாரு. நான் முன்னாடி இருந்தே தோனியுடைய மிகப்பெரிய ரசிகன்.

எந்தவொரு பின்னணியும் இல்லாமல் தானாக வளர்ந்து இன்னைக்கு இந்த இடத்துல அவர் இருக்காரு. அவர் ஊக்கமளித்த கோடிப் பேர்களில் நானும் ஒருத்தன்.

ரசிகர்களெல்லாம் ஸ்டேடியம்ல உட்கார்ந்திருந்தாங்க. நானும் ஒரு ரசிகனாக மைதானத்துக்குள்ள பெர்ஃபார்ம் பண்ணீட்டு இருந்தேன்.

எப்போதுமே இந்த மாதிரியான ஒரு நிகழ்வுக்குத் திட்டம்னு எதுவும் கிடையாது. அதை சரியாகப் பண்ணனும்ங்கிறதுதான் எங்களுடைய குறிக்கோளாக இருக்கும்.

இந்த நிகழ்வுக்கு முன்னாடி அனி ப்ரோ `எப்போதும் போல தெறிச்சிடணும்'னு சொன்னாரு. அதே மாதிரி நடந்துச்சுனு நினைக்கிறேன்.

Anirudh at Chepauk
Anirudh at Chepauk

நாங்க அனி ப்ரோவோட இந்த பெர்ஃபாமென்ஸுக்கு சின்னவொரு பகுதியாக இருந்தோம். அவர் எங்க எல்லோருக்கும் நன்றி சொன்னாரு.

எனக்கு முக்கியமாக ஒரு ஸ்பெஷலான மொமன்ட் இந்த நிகழ்வுல நடந்தது. இந்த அரங்கத்துல நாங்க முடிச்சிட்டு போகும்போதும் `விடாமுயற்சி' திரைப்படத்துல நான் பாடியிருந்த `பத்திகிச்சு' பாடலை ப்ளே பண்ணாங்க.

இது எனக்கு ரொம்பவே எமோஷனல் மொமன்ட். இதுக்காகவும் நான் அனி ப்ரோக்கு நன்றி சொல்லிக்கிறேன்."எனக் கூறி முடித்துக் கொண்டார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

டேனியல் பாலாஜி : 'ஹீரோவாக வரக்கூடிய தகுதிகள் அத்தனையும் அவரிடம் இருந்தது' - நெகிழும் இயக்குநர்கள்

'காக்க காக்க' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் டேனியல் பாலாஜி. சென்ற வருடம் இதே நாளில் அவர் காலமானார். அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தும் போது, “தம்பி டேனியல... மேலும் பார்க்க

Vikram: விக்ரமிடம் கதை சொன்ன இயக்குநர்கள்; மடோன் அஸ்வின் பட அப்டேட்

சின்னதொரு போராட்டத்திற்குப் பின் வெளியான 'வீர தீர சூரன் பாகம் 2' படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்புகளால் மகிழ்ச்சியில் இருக்கிறார் விக்ரம். அவரது ரசிகர்கள் பலரும் இயக்குநர் அருண்குமாரை, 'சைலன்ட் ஃபேன்... மேலும் பார்க்க

What to watch on Theatre & OTT: வீர தீர சூரன், L2 Empuraan, Mufasa - இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

வீர தீர சூரன் பாகம் 2 வீர தீர சூரன் பாகம் 2S.U. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வீர தீர சூரன் பா... மேலும் பார்க்க

The Door Review: அதே பழிக்குப் பழி வாங்கும் ஹாரர் சினிமா! பாவனாவின் தமிழ் கம்பேக் கவனம் பெறுகிறதா?

கட்டிடக்கலை நிபுணராக இருக்கும் பாவனா, தனது புதிய புராஜெக்ட் ஒன்றினைக் கட்டுவதற்காக அந்நிலத்திலிருக்கும் புராதன கோயில் ஒன்றை இடிக்கிறார்.அதைத் தொடர்ந்து மதுரையில் வக்கீலாக இருக்கும் அவரின் தந்தை பைக்கி... மேலும் பார்க்க