இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
Apollo: 'மூட்டுப் பாதுகாப்புத் திட்டம்' அறிமுகப்படுத்திய அப்போலோ
அப்போலோ மருத்துவமனை (Apollo Hospitals) இன்று சென்னையில் அப்போலோ மூட்டுப் பாதுகாப்புத் திட்டம் (Apollo joint Preservation Program) என்ற மருத்துவ பராமரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் எலும்பியல் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கும் வகையில் பல அம்சங்களை உள்ளடக்கிய முழுமையான புதுமையான மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த மூட்டுப் பாதுகாப்பிற்கான மருத்துவ பராமரிப்பை முழுமையாக வழங்கும் பிரத்தியேக முனமுயற்சியாகும் மூட்டுப் பகுதியில் உருவாகும் ஆரோக்கிய பிரச்சினைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதன் பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையிலான சிகிச்சை அளிக்கப்படும். இதனால் மூட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது மூட்டுப் பகுதியின் அசைவு மற்றும் இயக்கத்தையும் பராமரிக்க முடியும் தேவையில்லாத அறுவைச் சிகிச்சைகளை தவிர்க்க முடியும். வழக்கம் போல் தங்களது அன்றாட வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்னெடுக்க முடியும்.

இந்த நிகழ்வை தமிழ்நாடு ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும். எம். ஆர்.எஃப் அறக்கட்டளையின் தலைமை பயிற்சியாளருமான திரு எம். செந்தில்நாதன் (Mr M. Senthilnathan Head Coach Tamil Nadu Men's Cricket Team and Head Coach, MRF Pace Foundation) L លក់គ្រ சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த மருத்துவ ஆலோசகர்களான டாக்டர் என். சிதம்பரநாதன் மூத்த கதிரியக்க Dr. N. Chidambaranathan, Senior Consultant Radiologist), டாக்டர் நவலடி சங்கர் மூதத எலும்பியல் அறுவை சிகிச்சை (Dr. Navaladi Shankar, Senior Consultant Orthopaedic Surgeon), LL Ca கோசிகன் மூத்த எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் [IDr K.P Kosygan, Senior Consultant Orthopaedic Surgeon: டாக்டர் மதன் மோகன் ரெட்டிமூத்த ஆலோசகர் மூட்டு மாற்று & ஆர்த்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் Dr.Madan Mohan
Reddy, Senior Consultant Joint Replacement & Arthroscopic Surgeon, கண்ணன் மூத்த ஆலோசகர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரும் பங்குபெற்றனர்.
சென்னை அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகரும். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அருண் கணணன (Dr Arun Kannan, Senior Consultant Orthopaedic Surgeon, Apollo Hospitals, Chennai) அப்போலோ மூட்டுப் பாதுகாப்புத் திட்டம் (The ApolloJoint Preservation Program) என்பது மூட்டுப் பராமரிப்பை நாம் எவ்வாறு அணுகுகிறோம் என்பதில் ஒரு திருப்புமுனையை உருவாக்கியிருக்கும் முன்முயற்சி திட்டமாகும். இது நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சையில்லாத மேம்பட்ட அதிநவீன சிகிச்சை முறைகள் advanced non-invasive treatments) மற்றும் குறைந்தபட்ச அறுவை மூலம் மேற்கொள்ளப்படும் ஊடுருவல் சிகிச்சைகளை Iminimally invasive treatments) Qu உதவுகிறது. இவை அவர்களின் உடல் இயக்கத்தை பராமரிக்கவும். வலியைக் குறைக்கவும், ஒட்டுமொத்த மூட்டு செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. அறுவை சிகிச்சையை முடிந்தளவிற்கு தாமதப்படுத்துவது மட்டுமல்ல, தனிநபர்கள் முடிந்தவரை நீண்ட காலம் சுறுசுறுப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ அவசியமான வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.
தமிழ்நாடு ஆண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும். எம்.ஆர்.எஃப் பேஸ் அறக்கட்டளையின் தலைமை பயிற்சியாளருமான திரு எம் ល់ (Mr. M. Senthilnathan, Hand Coach Tamil Nadu Men's Cricket Team and Head Cosch MRF Pace Foundation பேசுகையில், பரபரப்பாக கிரிக்கெட் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் முதல் வழக்கம் போல் தங்களது அன்றாட வாழ்க்கையை மேற்கொள்பவர்கள் வரை அனைவருக்கும் மூட்டுகள் ஆரோக்கியத்துடன் இருக்கவேண்டியது அவசியம் மூட்டுப் மராமரிப்பில் ஆரம்பகால பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நடைமுறைகளுடன் கட்டமைக்கப்பட்ட முழுமையான பராமரிப்புக்காக வடிவமைக்கப்பட்ட இது போன்ற திட்டங்கள் வயதாகும்போது மக்கள் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவும் அப்போலோ மருத்துவமனைகள் மூட்டு பராமரிப்புக்காக இந்த நிபுணத்துவமிக்க அணுகுமுறையை முன்னெடுத்து இருப்பது கமளிக்கும் அமைந்திருக்கிறது என்றார்.
மூட்டு வலி ஆர்த்திரிட்டிஸ் வீக்கம் அல்லது விளையாட்டு தொடர்பான காயங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்க்காகவே மிக பிரத்தியேகமாக அப்போலோ மூட்டுப் The Apollo joint Preservation Program வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே தளத்தின் கீழ் அதிநவீன சிகிச்சைகள், மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு முழுமையான ஆதரவு ஆகியவற்றை எளிதில் பெறுவதன் மூலம் இப்போது சென்னையில் மூட்டு வலியால் அவதிப்படுவர்கள் தங்கள் மூட்டுகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இந்த புதிய மூட்டுப் பராமரிப்புத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்
அப்போலோ மருத்துவமனை அறிமுகப்படுத்தி இருக்கும் இந்தக் மூட்டுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் பல்வேறு சிகிச்சைகளிலிருந்து தங்களுக்கு அவசியமான சிகிச்சையைத் தேர்ந்தெடுத்து மேற்கொள்ளும் வாய்ப்புகள், அதை தொடர்வதற்கு ஆதரவளிக்கும் சேவைகள் இப்போது கிடைக்கின்றன. அப்போலோ மருத்துவமனைகள் ஒவ்வொருவருடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு அவர்கள் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதை ஊக்குவிக்கவும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது
அப்போலோ மருத்துவமனை பற்றி:
1983-ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகப் பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையைத் தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி முயற்சியை மேற்கொண்டார் அப்போது இந்தியாவில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது இன்று ஆசியாவிலேயே மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அதில் உலகம் முழுவதும் 12,000-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன். 72 மருத்துவமனைகள் சுமார் 5000 மருந்தகங்கள். 400-க்கும் அதிகமான கிளினிக்குகள், 1228 மருத்துவ பரிசோதனை மையங்கள் 700-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள் 15-க்கும் மேற்பட்ட மருத்துவ கல்வி மையங்கள் மற்றும் உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சி அறக்கட்டளை என உலகின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ உள்ளது. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் முதல் புரோட்டான் சிகிச்சை மையத்தை நிறுவுவதற்காக அண்மையில் முதலீடு செய்துள்ளது.
ஒவ்வொரு 4 நாட்களுக்கு அப்போலோ மருத்துவமனை குழுமம் பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சர்வதேச தரத்திலான மருத்துவ சிகிச்சை முறைகளை எல்லோருக்கும் எளிதில் கிடைக்கச் செய்வதையே தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்டு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும் உலகத் தரத்திலான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படும் அதன் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக சிறப்பு தபால் தலையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2010-ல் அப்போலோ மருத்துவமனைகள் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டிக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கெளரவித்தது.
கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ ஆராய்ச்சிகள், சர்வ தேசத் தரத்திலான மருத்துவ சேவைகள், அதி நவீன தொழில் நுட்பம் ஆகியவற்றில் அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் தொடர்ந்து சிறந்து விளங்குவதுடன் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து பேணி வருகிறது மருத்துவ சேவைகளுக்காக நாட்டில் சிறந்து விளங்கும் மருத்துவமனைகளில் தொடர்ந்து தர வரிசையில் அதன் மருத்துவமனைகள் முன்னணியில் இருந்து வருகின்றன.