செய்திகள் :

Autograph: "இப்போ ஆட்டோகிராஃப் படம் பார்க்கும்போது எனக்கே கிரிஞ்ச்னு தோனுது" - சேரன் ஓப்பன் டாக்

post image

டொவினோ தாமஸ் நடித்திருக்கும் 'நரிவேட்டை' திரைப்படம் இம்மாதம் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் மூலம் நடிகராக மலையாளத்தில் அறிமுகமாகிறார் நடிகர் சேரன்.

படத்தில் ஒரு காவல் அதிகாரி கேரக்டரில் இவர் நடித்திருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 'ஆட்டோகிராஃப்' திரைப்படம் இன்றுவரை ஒரு கல்ட் படமாக பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.

Narivettai - Cheran
Narivettai - Cheran

இத்திரைப்படம் கூடிய விரைவில் ரீ ரிலீஸ் ஆகவிருக்கிறது. ரீ ரிலீஸையொட்டி சமீபத்தில் ஏ.ஐ உதவியுடன் ஒரு டிரெய்லரையும் தயார் செய்து வெளியிட்டிருந்தார்கள்.

'நரிவேட்டை' திரைப்படத்திற்காக அவரை சந்தித்துப் பேசுகையில் 'ஆட்டோகிராஃப்' ரீ ரிலீஸ் பற்றியும் பேசினோம்.

20 நிமிடம் நானே கட் பண்ணியிருக்கேன்!

பேச தொடங்கிய சேரன், "2K கிட்ஸை கவர் பண்ணுவதற்கு ஆகத்தான் அந்த AI டிரைலர் பயன்படுத்தியிருந்தோம். அப்போதான் அவங்க எதிர்பார்த்து வருவாங்க.

ஆனா, அன்றைக்கு கொடுத்த பொறுமையை நான் இன்றைக்கு எதிர்பார்க்க முடியாது.

அன்றைக்கு அந்தப் படம் 2 மணி நேரம் 50 நிமிடம் இருந்தது. இப்ப அதில் 20 நிமிடம் நானே கட் பண்ணியிருக்கேன்.

எனக்கே இன்றைக்கு பார்த்து இது க்ரிஞ்ச், இது பூமர் அப்படியெல்லாம் தோணும். ரியாலிட்டியை நாம ஏக்ஸெப்ட் பண்ணிக்கணும்.

சேரன்
சேரன்

ஏன்னா, அன்றைக்கு டேஸ்டுக்கு அது தெரியாது. ஆனா, இன்றைக்கு எனக்கே என்னை பார்க்கும் போது கொஞ்சம் ஓவர் ஆக்டிங் பண்ணியிருக்கோமோன்னு தோணுது.

அதனால் அதில் எதெல்லாம் வேண்டாமோ அதெல்லாம் கட் பண்ணிட்டேன். அப்புறம் இன்றைக்கு சவுண்டு வேற மாதிரி இருக்கு. 2004-ல நாம கேட்ட சவுண்டு இப்போ ரொம்ப பழசா தெரியும்.

ரீ-வொர்க் பண்ணியிருக்கேன்!

அப்போ இந்த சவுண்டை நாம வேறாக கொடுக்கணும்னு நான் 'ஆட்டோகிராஃப்' ரீரெக்கார்டிங்கில் மொத்த சவுண்டு செட்டப்பையும் நான் ரீ-வொர்க் பண்ணியிருக்கேன்.

இன்னைக்குள்ள படங்கள் எப்படி வருதோ அந்த டெக்னாலஜியையும் கொடுத்திருக்கேன். முதலில் வந்தது ஃபில்ம். இப்ப அதை ரீஸ்டோரேஷன் பண்ணிட்டு அதை டிஐ பண்ணும் போது ஃபுல் கலர் டோன் மாத்தியிருக்கேன்.

சேரன், கோபிகா, ஆட்டோகிராஃப்

ஒவ்வொரு போர்ஷன்களுக்கு வேற வேற டோனாக மாத்தியிருக்கேன். இவ்வளவு சிரத்தைக் கொடுத்து உழைக்கிறதுக்கு காரணம் இன்றைக்கு இருக்கிற ஆடியன்ஸ் முட்டாள் இல்ல.

அவன் ரொம்ப புத்திசாலி. அவனை ஏமாற்றினால் அவனுக்குப் பிடிக்காது. அதனால் அவனுக்கான பொறுப்போட நம்ம ஒரு படம் கொடுக்கணும்னு நினைக்கிறேன் அவ்வளவு தான்!" எனக் கூறியிருக்கிறார்.

Thug Life: `நீயா? நானா?' - `தக் லைப்' பட டிரெய்லர் க்ளிக்ஸ் | Photo Album

Thug LIfe Trailer clicksThug LIfe Trailer clicksJunior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxsவணக்கம்,BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம... மேலும் பார்க்க

Thug Life: 'எமனுக்கும் எனக்கும் நடக்குற கதை இது' - மிரட்டும் கமல், சிம்பு | வெளியானது டிரெய்லர்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தி... மேலும் பார்க்க

Soori: 'என்னோட பேரு ராமன்; ரஜினி சார் படத்தைப் பார்த்துதான்..!' - நடிகர் சூரி சொல்லும் பெயர் காரணம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் ‘விடுதலை 2’. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூரி நடிக்கும் புதிய படத்தை இயக்கியிருந்தார் பிரசாந்த் பாண்டியராஜ். இவர் விமலை வைத்து இயக்கி... மேலும் பார்க்க

Maanan: "பலே பாண்டியா... அப்படிச் சொல்வதற்குத் துணிச்சல் வேண்டும்" - சூரியைப் புகழும் வைரமுத்து

சூரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில், பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்' திரைப்படம் நேற்று (மே 16) வெளியானது. காமெடி கலந்த எமோஷனல் திரைப்படமான `மாமன்', திரையரங்குகளில் ரசிகர்களிட... மேலும் பார்க்க

Ace: "ஒரு நடிகரா அவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்ருக்கிறேன்" - விஜய் சேதுபதி குறித்து நடிகை ருக்மிணி

ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘ஏஸ்’(ACE) . கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத... மேலும் பார்க்க