திருவண்ணாமலையில் மண் சரிவு: நெஞ்சைப் பதற வைக்கிறது -விஜய் இரங்கல்!
BB Tamil 8: இந்த வாரதிற்கான கேப்டன்ஷிப் டாஸ்கிற்கு மோதிக்கொண்ட ஜெஃப்ரி, சாச்சனா- வென்றது யார்?
பிக் பாஸ் தமிழ் சீசன் 8, 57 நாட்களைக் கடந்திருக்கிறது.
18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். முதல் வாரத்திலேயே ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி என்ற ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருந்தார்கள். இதில் ஆறாவது போட்டியாளராக நேற்று சிவக்குமார் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று வெளியான புரோமோவில் நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களின் பெயர்கள் வெளியாகி இருக்கிறது.
அதில் மஞ்சரி, முத்துக்குமார், சாச்சனா, ராணவ், ரஞ்சித், தர்ஷிகா, சௌந்தர்யா, ராயன், பவித்ரா, சத்யா, ஜாக்லின், ஆனந்தி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதனைத்தொடர்ந்து வெளியான மூன்றாவது புரோமோவில் இந்த வார கேப்டன் யார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த வாரத்திற்கான கேப்டன்ஷிப் டாஸ்க் நடக்கிறது. அதில் ஜெஃப்ரி, சாச்சனா இடையே போட்டி நடக்கிறது. அதில் ஜெஃப்ரி வெற்றி பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் கேப்டன் ஆகிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...