செய்திகள் :

BB Tamil 8 Day 88: ‘முத்து என்ன ஹீரோவா சீன் போடறான்?’ - ரயான் ஆவேசம்; காயமடைந்த அருணும் விஷாலும்

post image
முயல் - ஆமை கதை போல ஆகி விட்டது. யெஸ்….. TTF-ஐ வென்றிருப்பவர் யார் தெரியுமா? வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்த ரயான். இறுதிப் படிக்கட்டைத் தொடுவதற்காக நடந்த ஆட்டத்தில் பரமபதம் போல மதிப்பெண்கள் மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டத்தோடு ரயானின் வேகமான உழைப்பும் இணைந்து கொண்டதால் அவர் முன்னுக்கு வந்தது நியாயமான விஷயமே.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 88

புத்தாண்டு கேக் அனுப்பி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார் பிக் பாஸ். மஞ்சரிக்கு அன்புக் கடிதம் எழுதி உறவைப் பலப்படுத்திக் கொண்டார் ஜாக்குலின். யார் பலமாக முன்னேறுகிறார்களோ அவர்களுடன் அப்போதைக்கு இணைந்து கொள்கிறாரோ ஜாக்குலின்?

TTF -8 துவங்கியது. Snow bowling ஆட்டம். ‘உருட்டு பால்’ என்பது டாஸ்க்கின் தலைப்பு. மற்ற  போட்டியாளர்களின் புகைப்படம்  ஒட்டப்பட்ட விங்க்ஸ்களை இஷ்டப்பட்ட ஆர்டரில் அடுக்கிக் கொள்ள வேண்டும். ஸ்பின் பாலை உருட்டி ஒன்பது விங்க்ஸ்களையும் வீழ்த்தி விட்டால் 3 பாயிண்ட். மாறாக எவருடைய புகைப்படங்கள் விழவில்லையோ, அவர்கள் அனைவரிடமும் தன்னுடைய மொத்த பாயிண்ட்டை இழக்க நேரிடும். இதுதான் விதி.

பிக் பாஸில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

முதலில் தடுமாறி ஆடுபவர்களைப் பார்த்து பின்னால் வருபவர்கள் கற்றுக்கொண்டு தேர்ச்சியடைவார்கள். இதுதான் இந்த டாஸ்க்கிலும் நடந்தது. முதலில் ஆடிய அருண் இரண்டு வாய்ப்புகளையும் தவற விட்டார். எனவே அவருடைய 3 பாயிண்ட்டுகளை மற்ற ஒன்பது பேரும் பிரித்துக் கொள்ள வேண்டும். கால், அரைக்கால் எல்லாம் கூடாது. முழு மதிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்கிற விதியை அமைத்து சண்டை வருமா என்று எதிர்பார்த்தார் பிக் பாஸ். 

‘உருட்டு பால்’ ஆட்டத்தில் கலக்கிய ரயான்


“ஓகே.. நான் ஒரு ஐடியா சொல்றேன்..” என்று வழக்கம் போல் ஆரம்பித்தார் முத்து. “முதல்ல எல்லார் பாயிண்ட்டையும் சமமா கொண்டு வர முயற்சி பண்ணுவோம்” என்று சமத்துவ ஐடியாவை அவர் கொண்டு வர மற்றவர்களின் முகம் மாற “அதுக்குள்ள மூஞ்சை சுளிக்காதீங்க. இது என் ஐடியாதான். இல்லைன்னா நீங்க வேற ஏதாவது சொல்லுங்க” என்று பந்தை அந்தப் பக்கம் தள்ளிவிட்டார். முத்துவின் ஐடியாவிற்கு ஜாக் லாஜிக்கலாக ஆட்சேபம் தெரிவித்தது சரியான விஷயம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டத்தின் பங்கும் இருப்பதால்  சில நபர்களுக்கு தொடர்ந்து பாயிண்ட்டுகள் தொடர்ந்து செல்லக்கூடிய ஆபத்து இருக்கிறது.

உருட்டு பால் டாஸ்க்
உருட்டு பால் டாஸ்க்

அருண் குறைந்த பாயிண்ட்டுகள் எடுத்திருப்பதால் அதைப் பறிக்க பவித்ரா, சவுந்தர்யா போன்றோருக்கு விருப்பமில்லை. எனவே அவர்கள் விலகிக் கொள்ள,  பங்கு போடுபவர்களின் எண்ணிக்கை ஐந்தாக சுருங்கியது. “நேத்து ஒரு பாயிண்ட் விட்டேன். எல்லா இடத்துலயும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று வாதிட்டார் ஜாக். தனது பாயிண்டை ராணவ்விற்கு விட்டுத்தர முடிவு செய்தார் முத்து. மீதமிருந்த ரயான், ஜாக், ராணவ் ஆகிய மூவரும் அருணின் பாயிண்ட்டுகளைப் பங்கு போட்டுக் கொண்டார்கள். 

அடுத்து வந்த விஷாலும் இரண்டு வாய்ப்புகளை தவற விடவே அவருடைய ஆறு பாயிண்டுகளை ராணவ், ரயான், தீபக், மஞ்சரி ஆகியோர் பங்கிட்டுக் கொண்டார்கள். அடுத்து ஆட வந்த ரயான்தான் சுவாரசியப்படுத்தினார். அவர் அனைத்து விங்க்ஸ்களையும் அடித்து காலி செய்ய 3 பாயிண்ட்டுகள் லம்ப்பாக கிடைத்தது. பவித்ராவைத் தவிர அடுத்து வந்த அனைவரும் ரயானை முன்னுதாரணமாகக் கொண்டு வேகமாக வீசி அனைத்து விங்க்ஸ்களையும் தள்ளி முழு மதிப்பெண்கள் பெற்றார்கள். இப்போது ஸ்கோர் போர்டில் ரயான் முன்னிலையில் இருக்க விஷால், ஜாக், பவித்ரா, அருண் ஆகியோர் தங்களின் மதிப்பெண்களை முற்றிலுமாக இழந்து ஜீரோவில் இருக்கிறார்கள். பரமபத பாம்பு இவர்களைக் கடித்துவிட்டது. 

பிக் பாஸ் 8 நாள் 88
பிக் பாஸ் 8 நாள் 88

இந்த ஆட்டம் முடிந்து வெளியே வந்ததும் “ராணவ்விற்கு ஏன் கொடுத்தே. அவனுக்குத்தான் பாயிண்ட் ஆல்ரெடி இருந்ததே?” என்று மஞ்சரி கடிந்துகொள்ள “கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்” என்று சமாளித்தார் முத்து. “ஐயா.. சாமி.. லக் அடிப்படையில் ஆட்டம் வேண்டாம். எல்லாம் போயிடுது. ஆடி ஜெயிக்கற மாதிரி டாஸ்க் வைங்க” என்று பிக் பாஸிடம் சலித்துக் கொண்டார் பவித்ரா. 

‘முத்து என்ன ஹீரோவா சீன் போடறான்?’ - ரயான்  ஆவேசம்

“பிக் பாஸ் ஒரு ரூல் போட்டா, இவனும் கூட சேர்ந்து ரூல்ஸ் சேர்க்கறான்” என்று முத்துவைப் பற்றி கடிந்து கொண்டார் மஞ்சரி. “எல்லோரையும் சமமா கொண்டு வர்றதா இந்த கேம். அதுக்காக மத்தவங்க கஷ்டப்பட்டு ஆடி பாயிண்ட் சேர்க்கறாங்க... ஹீரோயிக் மொமன்ட் கிரியேட் பண்றானா?” என்று ரயான் கேட்டது சரியான கேள்வி. ஆனால் பக்கத்திலிருந்த சவுண்டிற்கு இந்த அபிப்ராயம் பிடிக்காததால் “அவன் ஏதோ நேர்மையா பண்றான். சும்மா நச நசன்னு” என்று எரிச்சல்பட, அந்த எரிச்சல் ரயானுக்கும் தொற்றிக் கொள்ள இருவருக்கும் வாக்குவாதம். 

டாஸ்க்கின் போது ரயான்
டாஸ்க்கின் போது ரயான்
போன் டாஸ்க்கிற்கு மீண்டும் உயிர் வந்தது. ஓடி வந்து எடுத்தவர் மஞ்சரி. “நீங்கள் சொல்லும் நபர் தலைச்சாயம் பூசிக் கொள்ள வேண்டும்” என்று பிக் பாஸ் சொல்ல, என்னவென்று தெரியாமல் பலரும் கை தூக்கினார்கள். இந்த ஹேர்கலர் டாஸ்க் பற்றி ரயான் ஏற்கெனவே சொல்லி வைத்திருந்ததால், அவரைத் தேர்ந்தெடுத்தார் மஞ்சரி. 2 பாயிண்ட்டுகள் தருவேன் என்று டீல் பேசி முடித்தார்.

“என் கிட்ட சொல்லியிருந்தா நான் பண்ணியிருப்பேனே..” என்று ஜாக்கும் பவித்ராவும் மஞ்சரியிடம் வாக்குவாதம் செய்ய அவர்களை ஒருமாதிரியாக சமாளித்தார். ஆனால் இரண்டு பாயிண்டுகளையும் கொடுத்து எதிரிகளையும் சம்பாதித்துக் கொண்டு ஆடுவது சரிதானா என்கிற குழப்பம் மஞ்சரிக்கே வந்து விட்டது போல. ரயானுக்கே ஏன் அதிக பாயிண்ட்டுகள் போக வேண்டும் என்றும் தோன்றியிருக்கும்.  அதை அவர் முத்துவிடம் பகிர்ந்து கொள்ள “யப்பா.. கடைசில உனக்கே தோணிடுச்சா. அப்ப விடை தெரிஞ்சுடும்” என்று சூசகமாகச் சொன்னார் முத்து. “இம்பல்ஸிவா முடிவு பண்ணிட்டேன். செகண்ட் ஆப்ஷன் இருக்குன்றது அப்ப ஞாபகம் வரலை” என்று தன்னையே நொந்து கொண்டார் மஞ்சரி.

புதிய ஹேர் கலர் லுக்கில் ரயான்

“நல்ல வேளை கோல்டு கலர் வந்தது. பச்சை வந்திருந்தா ரொம்ப காண்டாகியிருப்பேன்” என்று புதிய ஒப்பனையில் வந்த ரயானின் மகிழ்ச்சி பிக் பாஸிற்குப் பொறுக்கவில்லை. எனவே மீண்டும் அழைத்து கோல்டின் மீது பச்சையையும் பூசி ரயானின் தலையை பஞ்சவர்ணமாக மாற்றி அழகு பார்த்தார். “கூல். இதுவும் நல்லாத்தான் இருக்கு” என்று ரயானை நக்கலடித்தார் மஞ்சரி.  தனக்கு கிடைத்த 3 பாயிண்ட்டுகளில் டீல் பேசிய படி ராயனுக்கு இரண்டை தாரை வார்த்தார். 

முத்துக்குமரன்
முத்துக்குமரன்

TTF9 துவங்கியது. ‘பாயிண்ட்ஸ் மன்றம்’ என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் பேச்சுப் போட்டி போல, முத்து, மஞ்சரிக்கு அடித்தது லக் என்று பார்த்தால் அது ‘மண் டிரம்மாம்’. போட்டியாளரின் புகைப்படங்கள் நான்கு துண்டுகளாக இணைக்கப்பட்டு டிரம்மின் மீது ஒட்டப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட போட்டியாளர் அந்த டிரம்மை அணிந்து ஆட, எதிர் தரப்பினர் புகைப்படத்தைப் பறித்து எல்லைக்கோட்டிற்கு வெளியே வீச முயல வேண்டும். நான்கு துண்டுகளையும் இழந்தால் அவர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.  டாப் 5 போட்டியாளர்களுக்கு பாயிண்ட் கிடைக்கும். 

“ராணவ் உங்களால் முடியுமா?” என்று பிக் பாஸ் கேட்க “பண்ணிடலாம் பாஸ்” என்று அவர் ஆர்வமாகக் கைதூக்க “இல்லை. மருத்துவர்களின் அட்வைஸ் வேண்டாம் என்றிருக்கிறது. நீங்கள் ஆட முடியாது” என்றார். (அப்ப எதுக்குய்யா கேட்கணும்?!) கூட்டணியா, தனி ஆட்டமா என்று குழப்பிடியத்து தனியாக ஆடுவது என்கிற முடிவுக்கு வந்தார்கள். 

“நேத்து ஒரு பேச்சு.. இன்னிக்கு ஒரு பேச்சா?’ முத்துவை மடக்கிய ரயான்

ஆட்டம் ஆரம்பிக்க, சவுந்தர்யா எளிய டார்கெட்டாக துரத்தப்பட்டதால், அவர் வில்லனிடமிருந்து தப்பிக்கும் ஹீரோயின் மாதிரி ‘வீல்’ என்று கத்திக்கொண்டே ஓடினார். ராணவ் கமென்ட்ரி கொடுக்க, சவுந்தர்யாவின் புகைப்படத் துண்டை எடுத்து போணி செய்தார் விஷால். அடுத்ததாக பவித்ராவின் துண்டை எடுத்தார் அருண். இதன் பிறகு ஆட்டம் கச்சா முச்சாவென்று நடக்க, ஒருவரோடு ஒருவர் ‘டம்.. டம்’ என்று முட்டிக் கொண்டார்கள். 

“ஆட்டத்தை நிறுத்திட்டு கொஞ்ச நேரம் ஆசுவாசப்படுத்திக்கங்க” என்று பிக் பாஸ் சொல்ல “என்ன படுத்தணும்?” என்று கேட்டு படுத்தினார் ராணவ். மஞ்சரியும் தீபக்கும் இணைந்து தன்னை டார்கெட் செய்ததாக கருதிய பவித்ரா, அது குறித்து கேள்வி கேட்க, எரிச்சலில் இருந்த மஞ்சரி ஹைடெஸிபலில் கத்த “ஏன் கத்தறே?” என்று தானும் கத்தினார் பவித்ரா. 

சவுந்தர்யா
சவுந்தர்யா

கிரவுண்டில் ஆடிய ஆட்டம் காரணமாக “நான் கிரவுண்ட் ரியாலிட்டி சொல்லட்டுமா. இதை தனியா ஆடினா ஜெயிக்க முடியாது. கூட்டணி போட்டாதான் ஆட்டம் முடியும்” என்று முத்துவின் பாணியில் ஐடியாவைத் தூவினார் அருண். அதற்காகவே காத்திருந்தது போல் “சொல்லுங்க.. எப்படிச் செய்யலாம்?” என்று உற்சாகமானார் முத்து. ராணவ் போக மீதி ஒன்பது போ் களத்தில் இருப்பதால் தலா மூன்று நபர்கள் கொண்ட அணியாக கூட்டணி வைக்கலாம் என்று முடிவானது. 

அதன்படி ரயான்-விஷால்-சவுந்தர்யா ஆகிய மூவர் ஓர் அணியாகவும் முத்து -ஜாக் - அருண் இன்னொரு அணியாகவும் மஞ்சரி -பவித்ரா -தீபக் மூன்றாவது அணியாகவும் கூட்டணி அமைத்தார்கள். ஸ்கோர் போர்டில் ரயான் முன்னிலையில் இருப்பதால், மற்ற இரண்டு அணிகளும் அவரை டார்கெட் செய்ய “பச்சையா தெரியுது. பண்ணுங்க. ஆனா காலைல கூட்டணி ஆட்டத்தைப் பத்தி பேசினியே. இது ஓகேவா முத்து” என்று கேள்வி கேட்டு அவரை காண்டாக்கினார் ரயான். 

காயமடைந்த அருணும் விஷாலும்

ரயானை டார்கெட் செய்யும் விதமாக ஆட்டம் தொடர, மஞ்சரி கீழே விழுந்ததால் ஆட்டம் நின்றது. வியர்த்து விறுவிறுத்திருந்த மஞ்சரி, தன்னை சமாளித்துக் கொண்டு ஓகே பிக் பாஸ் என்றது ஸ்போர்டிவ்னஸ். முத்து தனது அணியினருடன் ரகசியம் பேசினார். சிறிது நேரத்தில் அருணும் விஷாலும் கீழே விழ அதில் விஷாலுக்கு நல்ல அடி. அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தகவலை அறிந்து தலையைப் பிடித்துக் கொண்டு அழுதார் அருண். விஷால் மீதான நட்புணர்ச்சி அந்தக் கலக்கத்தில் அழுத்தமாக தென்பட்டது. பிறகு அருணும் மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

என்றாலும் வெளியே ஆட்டத்தின் உஷ்ணம் அடங்கவில்லை. ஆவேசமான உரையாடல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. “காலைல ஒரு பேச்சு. இப்ப ஒரு செய்கை. நியாயமா இது?” என்று ஜாக்கை கேள்வி கேட்டார் பவித்ரா. உள்ளே புகுந்த முத்து ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்கிற பாணியில் “உனக்கு எல்லோருமே டார்கெட் பண்ற மாதிரிதான் தெரியும். ஆனா அவன் வேற பிளான்ல இருக்கலாம். இதெல்லாம் காட்சிப்பிழை” என்கிற மாதிரி விளக்கம் அளித்தார். 

“உன்னை யாரும் டார்கெட்டா நினைக்கலை. உன்னை எப்ப வேணா அடிக்கலாம்” என்கிற மாதிரி பவியை பங்கமாக்கி பாவியாகினார் மஞ்சரி. “நொய்.. நொய்ன்னு கேள்வி கேட்காம ஆடுங்க” என்று பவித்ராவின் அனத்தல் தாங்காமல் காண்டானார் முத்து.  “முன்ன ஃபேர்ரா இருந்தது இப்ப அன்ஃபேர்ரா… ரைட்டு நடத்துங்கடா” என்று நக்கலடித்தார் ரயான். “நான் என்னளவில் நேர்மையா ஆடறேன்” என்பது அவரின் ஸ்டேட்மென்ட்.

ஜாக்கிற்கும் ரயானிற்கும் முட்டிக் கொண்டு பிறகு சமாதானமாகி பிறகு ஜாக் அனத்துவதோடு தொடர்ந்தது. “பச்சைக் கலர் சாயம் வந்தவுடனே ரொம்ப அப்செட் ஆயிட்டேன். எமோஷனல் சப்போர்ட் தேவைப்பட்டது.

முத்துகு்மரன், மஞ்சரி
முத்துகு்மரன், மஞ்சரி

தலையைக் கழுவறதுக்கு ஜாக் உதவி செய்த போது எமோஷனல் ஆகிட்டேன். அப்படியொரு பாண்டிங் எங்களுக்குள்ள இருக்கு. ஆனா கொஞ்ச நேரத்துலயே வேற மாதிரி பேசறா. எப்படி இது சாத்தியம்?” என்று ரயான் சவுந்தர்யாவிடம் புலம்ப “விடு.. ஆட்டத்துல அப்படித்தான் கொஞ்சம் பர்சனலா போயிடும்” என்று ஆறுதல் சொன்னார் சவுண்டு. 

அருணும் விஷாலும் மருத்துவ சோதனை முடிந்து நல்லபடியாக திரும்பி வர “அப்புறம்.. என்ன.. சோத்தைப் போட்டு மீன் வறுவல் போட்டு சாப்பிட்டு கொண்டாடுவோம். நாளைக்கு எனர்ஜி வேணும்” என்கிற மாதிரி உற்சாக மோடிற்கு மாறினார் முத்து. ரயான் பயணிக்கிற வேகத்தைப் பார்த்தால் அவர் டைட்டில் அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கடும் போட்டி, ஆவேசம், காயம் என டாஸ்க் சூடுபிடித்திருக்கின்றன. போகிற போக்கைப் பார்த்தால் போட்டியாளர்கள் கட்டோடுதான் கப்பு வாங்குவார்கள்.

BB Tamil 8: ``பவித்ராதான் டைட்டில் வின்னர்! ஏன்னா..?'' - பிக் பாஸ் ஜெஃப்ரி எக்ஸ்க்ளுசிவ்

பிக் பாஸ் சீசன் 8 கடைசி கட்டத்தை எட்டிவிட்டது. ஆட்டம் சூடிபிடிக்க எவிக்‌ஷனும் பரபரப்பாகியிருக்கிறது. கடந்த வாரம் வெளியேறியிருந்த ஜெஃப்ரியை சந்தித்துப் பேசினோம்.நம்மிடம் பேச தொடங்கிய அவர், ``வெளில நல்ல... மேலும் பார்க்க

BB Tamil 8: 'வீட்டுல யாராவது பெரியவுங்க இருந்தா கூட்டிட்டு வாங்க' - அர்ணவை ரோஸ்ட் செய்த அருண்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 92வது நாளுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் ப... மேலும் பார்க்க

BB Tamil 8: களமிறங்கும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்; வெளியான அறிவிப்பு- அதிர்ச்சியில் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 92வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் ப... மேலும் பார்க்க

BB Tamil Day 91: `அழ வேணாம்ன்னு இருக்கேன்; அழ வெச்சிடாத!' - வெளியேறிய மஞ்சரி, அடுத்தது யார்?

‘கூட்டிக் கழிச்சுப் பாரு. கணக்கு சரியா வரும்’ என்பது ‘அண்ணாமலை’ படத்தில் அடிக்கடி வரும் வசனம். ஆனால் பிக் பாஸ் வீட்டின் கணக்கு எப்படிப் போட்டாலும் சரியாக வராது. அப்படியொரு விசித்திரமான அக்கவுன்ட்டிங் ... மேலும் பார்க்க

BB Tamil 8: "அவுங்கதான் PR Team வச்சுருக்காங்க" - ஹவுஸ்மெட்ஸ் குற்றம்சாட்டும் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 92வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் TTF டாஸ்க் நடைபெற்றது. இறுதிப் போட்ட... மேலும் பார்க்க

BB Tamil 8: "I Love You சொல்லணும்னா ஓப்பனாவே சொல்லுவேன்" - விஷாலிடம் பேசியது குறித்து அன்ஷிதா

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனின் 91வது நாளைக் கடந்து இறுதிக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.இதில் அக்கா, தம்பி எனப் பழகிய ஜெஃப்ரி, அன்ஷிதா இருவருமே கடந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறியிருக்கின்... மேலும் பார்க்க