செய்திகள் :

BB Tamil 9 : `நீங்க படிச்சிட்டிருக்கிற ஸ்கூல்ல‌ நான் ஹெட் மாஸ்டாரா இருந்தவன்' - அமித் பார்கவ் யார்?

post image

நாளொரு சண்டையும் பொழுதொரு சத்தமுமாக அதகளப்படுத்திக் கொண்டிருக்கிறது, அக்டோபர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 9.

இருபது போட்டியாளர்களுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் நந்தினி, அப்சரா, பிரவீன் காந்தி, ஆதிரை ஆகிய நான்கு பேர் தற்போது வெளியேறி விட்டனர்.

வெளியேறிய நான்கு பேரைச் சமன் செய்யவோ என்னவோ வைல்டு கார்டு போட்டியாளராக நான்கு பேரை அந்த வீட்டுக்குள் அனுப்ப இருக்கிறார் பிக்பாஸ்.

பிரஜின், சான்ட்ரா, அமித் பார்கவ், திவ்யா கணேஷ் ஆகிய நான்கு பேரும் இந்த வார இறுதியில் நிகழ்ச்சிக்குள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்கு போட்டியாளர்களில் ஒருவர் அமித் பார்கவ். 'கல்யாணம் முதல் காதல் வரை' முதலான சில சீரியல்களில் வந்தவர். சில படங்களிலும் நடித்திருக்கிறார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் பெரும்பாலோர் நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களை ஓரளவுக்குப் பார்த்தவர்களாகவே இருப்பார்கள். ஓரிருவர் வேண்டுமானால் நிகழ்ச்சியை பார்த்திராத நிலையில் அதில் கலந்து கொண்டிருப்பார்கள்.

ஆனால் அமித் பார்கவோ தமிழ் பிக்பாஸ் சீசனை முதல் சீசனில் இருந்து கடந்தாண்டு நடந்த வரை எல்லா சீசனையும் பார்த்து வந்தவர்.

முந்தைய சீசன்கள் குறித்து விமர்சனங்கள் வைத்திருக்கிறார். இப்போதும் அத்தனை சீசனிலும் கலந்து கொண்ட போட்டியாளர்களின் விவரங்களும் அவர்கள் ஆடிய ஆட்டம் குறித்தும் விரல் நுனியில் இவரிடம் தகவல்கள் இருக்கும் என்கிறார்கள்.

ஆனாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தால் செல்ல மாட்டேன் என்றே சொல்லி வந்தார். இது குறித்துக் கேட்டதற்கு, 'ஆடியன்ஸா பார்க்கலாம், பிடிக்கலைனா சேனல் மாத்திடலாம். ஆனா போட்டியாளராப் போறப்ப கோபம் வந்து ஏதாவது ஏடாகூடமா ஆகிடுச்சுன்னா பிரச்னை ஆகிடும். அதுவுமில்லாம இருக்கிற மரியாதையும் பங்கம் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை' என்றே சொல்லியிருந்தார்.

அமித் பார்கவ்

தமிழ் சீசன் இப்படியென்றால், கன்னட பிக் பாஸிலோ இவர் பிக் பாஸாகவே இருந்திருக்கிறார். அப்போது கூட இந்த நிகழ்ச்சி குறித்து கூறிய போது 'நெகட்டிவிட்டி அதிகம் உண்டாகலாம் என்பதாலேயே வாய்ஸ் தருகிற அந்த வாய்ப்பையும் தொடர்ந்து ஏற்க மறுத்ததாக’ குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படிக் கூறி வந்தவரை எப்படி இழுத்தார் பிக்பாஸ்? அமித்துக்கு நெருங்கிய சிலரிடம் பேசினோம்.

''முதல்ல மறுத்ததாகத்தான் தெரியுது. ஆனாலும் தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து வர்ற உங்களை மாதிரி ஆட்கள் நிகழ்ச்சிக்குள் போனால் நன்றாக இருக்கும் என திரும்பத் திரும்பப் பேசியே சம்மதிக்க வச்சிருக்காங்க. அடிப்படையில் கொஞ்சம் கோபக்காரர். அந்த வீட்டுக்குள் இப்ப நடக்கிற சம்பவங்களைப் பார்க்குறப்ப இவருக்கு கோபம் வரலாம். எப்படி எதிர்கொண்டு இவரது கேமை ஆடப் போகிறார் தெரியலை' என்கிறார்கள் அவர்கள்.

BB Tamil 9: "விக்கல்ஸ் விக்ரமுக்கு தைரியம் இல்ல" - காட்டமான திவாகர்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB Tamil 9: "அவங்க குரூப்பிசம் பண்றாங்க"- திவாகர், சபரி மோதல்

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

BB Tamil Day 24: அபாண்டமாக லாஜிக் பேசிய திவாகர்; ஆதரவு தந்த பாரு! - ரிப்பீட் மோடில் சண்டை

பிக் பாஸ் என்கிற பெயரை மாற்றி `சவுண்ட் பாக்ஸ்' என்று வைத்து விடலாம். அந்த அளவிற்கு தினமும் ஒரே சத்தம். பீறிட்டு வரும் நடிப்பு அரக்கனின் கலைத்திறமையை மூடி மறைப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் சதி செய்கி... மேலும் பார்க்க

BB Tamil 9: "உன் தகுதி தராதரத்துக்கு நீ அப்படித்தான் பேசுவ" - ரம்யாவைச் சாடிய திவாகர்; எகிறும் சபரி

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் வீட்டில் மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்தனர். இதில் நந்தினி, பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் வெளியேற, 17 பேர் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்தனர். BB... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: `தண்ணீர் இல்லாக் காடு டு பிக்பாஸ் வீடு’ - யார் இந்த திவ்யா கணேஷ்?

இருபது போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் அக்டோபர் முதல் வாரம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல், இந்த வாரம் வைல்டு கார்டு என்ட்ரி நிகழவிருக்கிறது.சீரியல் நடிகர்கள் எண்ணிக்கையில் குறைவாகவும், சமூக ஊடக பிரபலங... மேலும் பார்க்க

BB Tamil 9: "நீ முதல்ல நியாயமா பேசுறியா?" - திவாகரிடம் எகிறிய சபரி