செய்திகள் :

BCCI: உள்ளூர் போட்டிகளில் ஆடும் வீரர்கள் இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? பாராமுகத்தில் தேர்வுக்குழு

post image
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கெதிராக படுமோசமான தோல்விகளைச் சந்தித்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக, கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டின் சொதப்பலால், சர்வதேச போட்டிகள் இல்லாத சமயத்தில் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கண்டிப்புடன் கூறினார்.

கம்பீர்

ஆனால், உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாகச் சிறப்பாக விளையாடியதால் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அபிமன்யு ஈஸ்வரன் (முதல்தர கிரிக்கெட் - 101 போட்டிகளில் 27 சதங்கள் உட்பட 7,674 ரன்கள்), சர்ஃபராஸ் கான் (முதல்தர கிரிக்கெட் - 54 போட்டிகளில் 16 சதங்கள் உட்பட 4,593 ரன்கள்) ஆகியோர் ஒரு போட்டியில் கூட பிளெயிங் லெவனில் சேர்க்கவில்லை.

அதேசமயம், கடந்த ஐ.பி.எல் சீசனில் கவனம் ஈர்த்த நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோர் அந்தத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டனர். இதில், ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி முதல் கிரிக்கெட்டில் 28 போட்டிகளில் 1077 ரன்கள் குவித்து, 61 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார். அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா முதல் கிரிக்கெட்டில் 12 போட்டிகளில் 26 சராசரியில் 47 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்.

உள்ளூர் போட்டிகள் எதற்கு?

இவர்களில், நிதிஷ் குமார் ரெட்டி இந்தத் தொடரில் இக்கட்டான சூழலில் ஒரு சதம் உட்பட 298 ரன்கள் குவித்து 5 விக்கெட் வீழ்த்தியபோதும், இரண்டு போட்டிகளோடு ஹர்ஷித் ராணா ஓரங்கட்டப்பட்ட போதும் எழுந்த ஒரு பொதுவான ஒரே கேள்வி, டெஸ்ட் போட்டிகளுக்குத் தகுதியான வீரர்களை எடுப்பதற்காக நடத்தப்படும் முதல் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் காத்திருக்கும் வீரர்களை பிளெயிங் லெவனில் சேர்க்காமல், ஐ.பி.எல் போன்ற ஒயிட் பால் கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் பிரபலமானவர்களை பிளெயிங் லெவனில் இறக்குவதா?

அஜித் அகர்கார் - ரோஹித்

இப்போது, இதுபோன்ற விமர்சனங்களுக்குத் தற்காலிக பதிலாக பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து, வழக்கம்போல் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால், இந்திய அணிக்கு அடுத்த ஐந்து மாதங்களுக்கு எந்த டெஸ்ட் போட்டியும் கிடையாது. சரி, உள்ளூர் போட்டிகளுக்கு பி.சி.சி.ஐ இவ்வளவு தூரம் முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறதே, நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் உள்ளூர் லிஸ்ட் ஏ (ஒயிட் பால்) கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிவரும் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கூடியது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளுக்கெல்லாம், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று பதிலளிக்கும் வகையிலான இந்திய அணியை பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது.

`ரோஹித் (கேப்டன்), கில் (துணைக் கேப்டன்), கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ரிஷப் பண்ட், ஜடேஜா'

இதுதான் 15 பேர் பட்டியல். இதில், கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை ஆடிய இந்திய அணிக்கும், தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணிக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. 2023 உலகக் கோப்பை அணியிலிருந்த அஷ்வினுக்குப் பதில் வாஷிங்டன் சுந்தர், சிராஜுக்குப் பதில் அர்ஷதீப் சிங், இஷான் கிஷனுக்குப் பதில் ஜெய்ஸ்வால், எக்ஸ்ட்ராவாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

champions trophy india squad

மற்றபடி சூர்யகுமார் யாதவ் சாபின்யன்ஸ் டிராபி அணியில் கிடையாது. இப்போது கேள்வியே, உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை அணியில் எடுக்க முடியாத அளவுக்கு இந்திய அணி வீரர்கள் அனைவரும் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்களா? ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணியில் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளிலெல்லாம் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாக அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது நியாயமே. ஆனால், ஹர்திக் பாண்டியா ஏற்கெனவே துணைக் கேப்டனாக அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு கில்லை எதற்காகத் துணைக்கு கேப்டனாக நியமித்தார்கள் என்பது புதிராகவே இருக்கிறது.

ஐபிஎல் மட்டும்தான் உள்ளூர் கிரிக்கெட்டா?

ரோஹித் இல்லாத சமயத்தில் இந்திய அணியை வழிநடத்த கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோர் கேப்டன்சிக்கு தகுதியான அனுபவம் வாய்ந்த நபர்களாக இருக்கும்போது கில்லை துணைக் கேப்டனாக்கியிருக்கிறார்கள். கில்லின் ஃபார்மும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ஒருவேளை துணைக் கேப்டனாக்கிவிட்டால் அணியில் சேர்க்கலாமா என்ற கேள்வி எழாத வண்ணம் அணியிலேயே வைத்திருக்கத் திட்டமா என்பதும் தெரியவில்லை.

சுப்மன் கில்

அதேபோல், 2022-ல் கார் விபத்துக்குப் பிறகு நேராகக் கடந்த ஆண்டு ஐ.பி.எல் பெர்ஃபாமன்ஸால் டி20 உலகக் கோப்பையில் நேராக இந்திய அணிக்குத் தேர்வான ரிஷப் பண்ட், அந்தத் தொடரிலும் பெரிதாக சோபிக்கவில்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் பெரிதாக ரன்கள் எதுவும் அடிக்கவில்லை. ஆனாலும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தற்போது அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே, அந்த இடத்துக்கு கே.எல்.ராகுலும் இருக்கிறார். ஷ்ரேயாஸ் ஐயர் பிளெயிங் லெவனில் இடம்பெறும் பட்சத்தில், இந்த இருவரில் எப்படியும் ஒருவரைத்தான் பிளெயிங் லெவனில் இறக்குவார்கள்.

இவர்களைத் தொடர்ந்து, அணியில் இருக்கும் ஒரே பேட்டிங் அண்ட் மீடியம் பேஸ் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மட்டுமே. காயம் ஏற்படாதவரை சாம்பியன்ஸ் தொடர் முழுவதும் நிச்சயம் பிளெயிங் லெவனில் அவர் இருப்பார். அவரைத்தொடர்ந்து, ஸ்பின் ஆல்ரவுண்டர் இடத்தில் ஜடேஜா, அக்சர் படேல், இருவரில் ஒருவரை பிளெயிங் லெவனில் எடுக்க வாய்ப்பிருக்கிறது. அடுத்து, ஸ்பின் பவுலர் இடத்தில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் இரண்டு பேர் இருந்தாலும் குல்தீபுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. இந்தியா ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடப்பவை என்பதால், அதுவும் ஒருநாள் போட்டி வடிவில் இந்தத் தொடர் நடைபெறுவதால், களத்தின் தன்மைக்கு ஏற்ப மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் தேவைப்படும் பட்சத்தில் பும்ரா, ஷமி, அர்ஷ்தீப் ஆகிய மூன்று பேருமே அணியில் இடம் பெறுவர்.

ரோஹித், விராட் கோலி

மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் இந்த மூன்று வேகப்பந்துவீச்சாளர்களில் இரண்டு பேரோடு, எக்ஸ்ட்ராவாக ஒரு ஸ்பின்னர் ஆல்ரவுண்டர் அல்லது ஒரு ஸ்பின்னர் பிளெயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பிருக்கிறது. இருப்பினும், இப்போது அறிவிக்கப்பட்டுக்கும் அணியில் பெரும் விவாதத்துக்குள்ளாவது பேட்டிங் யூனிட் மட்டுமே. ரோஹித், கோலி கடைசி இரண்டு டெஸ்ட் சீரிஸில் மோசமாக ஆடியிருந்தாலும் ஒயிட் பால் கிரிக்கெட் வேறு ஃபார்மட், எப்படி கம்பேக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும், கடந்த காலங்களில் அதை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று முன்னாள் வீரர்கள் ஆதரவுக்கு வருவதுண்டு.

சரி, கில், ஷ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு பேக் அப் பிளேயராகக் கூட உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடிய வீரர்கள் யாரும் இல்லையா? இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான பேட்மேன்ஸ்கள் இடம்பெற்றிருந்த இந்திய டெஸ்ட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் சொதப்பிய அதேவேளையில், இங்கு நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில் கருண் நாயர் (779), மயங்க் அகர்வால் (651) ஆகியோர் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மயங்க் அகர்வால் - கருண் நாயர்

ஆனாலும், சாம்பியன்ஸ் டிராபிக்கு பேக்கப் வீரராகக் கூட இவர்களில் ஒருவரையும் எடுக்கவில்லை தேர்வுக் குழு. இந்திய அணியில் சொதப்பினால் சம்பிரதாயத்துக்கு உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடுங்கள் என்று கூறும் பி.சி.சி.ஐ, இந்திய அணியில் ஆடி காயத்தால் வெளியேறினாலும் காயம் குணமடைந்ததும் அவருக்கான இடத்தைக் கொடுக்கும் பி.சி.சி.ஐ, சீனியர் வீரர்கள் எவ்வளவு சொதப்பினாலும் அவர்கள் கம்பேக் கொடுப்பார்கள் என்று சொல்லும் பி.சி.சி.ஐ, ஐ.பி.எல்லைத் தாண்டி உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை எப்போது கவனிக்கும்... ரெட் பால் (டெஸ்ட்) போட்டிகளுக்காவது அவ்வப்போது உள்ளூர் வீரர்களை இந்திய அணிக்கு எடுத்து இதுதான் பென்ச் என்றாவது கண்ணில் காண்பிக்கும் தேர்வுக் குழு, கடைசியாக ஒயிட் பால் (ஒருநாள், டி20) போட்டிகளுக்கு எப்போது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை எப்போது இந்திய அணி தேர்வு செய்தது என்றே தெரியவில்லை...

ஒயிட் பால் போட்டிகளுக்கு ஐ.பி.எல் ஒன்றுதான் உள்ளூர் போட்டி என்பது போல, ஐ.பி.எல்லில் ஓரிரு போட்டிகளில் அதிரடியாக நான்கைந்து சிக்ஸர் அடித்தாலோ அல்லது 150+ வேகத்தில் பந்து வீசினாலோ அல்லது ஒரே ஓவரில் மூன்று, நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினாலோ இந்திய அணியின் அடுத்த ஸ்டார் இவர்தான் என்று சொல்பவர்கள், சையது முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி போன்ற ஒயிட் பால் தொடர்களில் ஜொலிக்கும் வீரர்களை அடையாளம் காண்கிறார்களா... ஐ.பி.எல் என்பது பல்லாயிரம் கோடி கணக்கில் நடைபெறும் வணிக ரீதியிலான கிரிக்கெட் தொடர் மட்டுமே. ஐ.பி.எல் போட்டிகளின் பிளெயிங் லெவனில் 7 இந்திய வீரர்கள் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்று கூறினாலும், அதிகபட்சமாக இந்திய அணியில் இடம்பெறாத மூன்று உள்ளூர் வீரர்கள் இடம்பெறுவதே அதிசயம்.

BCCI

அப்படிப் பார்த்தாலும், ஒரு அணிக்கு மூன்று உள்ளூர் வீரர்கள் என 10 அணிக்கு 30 உள்ளூர் வீரர்கள் மட்டுமே ஆடுவார்கள். மற்றவர்கள் ஏலத்தில் மட்டும் எடுக்கப்பட்டு பென்ச்சில் அமரவைக்கப்பட்டிருப்பர். இதில், ஏலத்தில் வாங்கப்படாத உள்ளோர் வீரர்கள் லிஸ்ட் தனியாக நீளும். என்ன கூறினாலும், சாம்பியன்ஸ் டிராபி முடிந்ததும் பல்லாயிரம் கோடி வணிகத்தில் நடைபெறும், ஒளிபரப்பப்படும் ஐ.பி.எல் வந்துவிடும்... எப்போதும் போல ஓவர்னைட்டில் அடுத்த ஸ்டார் இவர் என்ற புகழாரம் ஒலிக்கும்... இப்படியே சென்றால் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு எப்போதுதான் தேர்வுக் குழு வாய்ப்பளிக்கும் என்ற கேள்விக்கு விடை யார் தான் சொல்வார்களோ?

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவின் செயல்பாடு மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் உங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/PorattangalinKathai

BCCI: விதிகளை அப்டேட் செய்த பிசிசிஐ, அதற்கேற்ப தனது அணியை அப்டேட் செய்திருக்கிறதா?

எப்போதுமே வெற்றிகள் வாழ்த்துகளோடு முற்றுப்பெறும், தோல்விகள்தான் பக்கவிளைவுகளாகத் தொடர் கேள்விகளால் துளைத்தெடுக்கும். இந்திய அணியின் தற்போதைய நிலைமையும் அதுதான். இலங்கைக்கு எதிராக ஒருநாள் தொடரை இழந்தது... மேலும் பார்க்க

Karun Nair: ``என் கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது; அது நடக்கும் வரை..'' -கம்பேக் கருண் நாயர்

கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு மூன்று மோசமான தோல்விகளைக் கண்ட இந்திய அணி, அவரின் தலைமைப் பயிற்சியின் கீழ் முதல் ஐ.சி.சி தொடரில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக, ஐ.சி.சி சாம்பியன... மேலும் பார்க்க

'ரிங்கு சிங் உடன் எனது மகளுக்கு நிச்சயதார்த்தம் நடக்கவில்லை' - பிரியா சரோஜ் தந்தை சொல்வதென்ன?

2023 ஐ.பி.எல்லில் கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்த ரிங்கு சிங், தன்னுடைய அதிரடி பேட்டிங் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு கேகேஆர் அணிக்கு சாம்பியன் கோப்பையை வென்று கொ... மேலும் பார்க்க

Champions Trophy: நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு; இடம்பிடிப்பாரா கருண் நாயர்? - DK சொல்வதென்ன?

பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஹைபிரிட் மாடலில் அடுத்த மாதம் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கவிருக்கிறது. போட்டி அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்களின் வீரர்களின... மேலும் பார்க்க

Rinku Singh - Priya Saroj: `இளம் எம்.பி -யைக் கரம் பிடிக்கும் ரிங்கு சிங்'; யார் இந்த பிரியா சரோஜ்?

2023 ஐ.பி.எல்லில், குஜராத், கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டியில், கொல்கத்தா அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற சூழலில், ஐந்து சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெறவைத்து ஓவர் நைட்டி... மேலும் பார்க்க

Wankhede: ``அந்த ஒரு போட்டி... " - அர்ஜுன் டெண்டுல்கருடனான நிகழ்வைப் பகிரும் பிரித்வி ஷா

இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக மும்பை அணி இருக்கிறது. அத்தகைய மும்பை கிரிக்கெட் அசோஷியனுடைய (MCA) வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்... மேலும் பார்க்க