‘விக்சித் பாரத்’ இளம் தலைவா்கள் உரையாடலில் பிரதமா் மோடி பங்கேற்பு
Bigg Boss tamil 8: வெளியேறிய இரண்டு ஆண் போட்டியாளர்கள்! கடைசிக் கட்ட பரபரப்பில் பிக்பாஸ்!
பிக்பாஸ் சீசன் 8 விஜய் டிவியில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது.
ரவீந்தர், அர்னவ், சாச்சனா, சுனிதா உள்ளிட்ட 18 பேர் ஆரம்பத்தில் என்ட்ரி ஆன நிலையில் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் மஞ்சரி, ராயன் உள்ளிட்ட 6 பேர் இணைந்தனர்.
மொத்தம் 26 போட்டியாளர்களில் அடுத்தடுத்த எவிக்ஷன் மூலம் இதுவரை 18 பேர் வெளியேறி விட்டனர்.
முத்துக்குமரன், அருண், தீபக், சௌந்தர்யா உள்ளிட்ட 8 பேர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலையில் ஒரு சர்ப்ரைஸ்க்காக ஏற்கனவே வெளியேறியிருந்த அர்னவ், ரவீந்தர், சுனிதா உள்ளிட்ட சில முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் இந்த வார எவிக்ஷனுக்கான ஷூட்டிங் இன்று காலை பிக்பாஸ் செட்டில் தொடங்கியது.
வரும் வாரத்துடன் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிற சூழலில் யாரெல்லாம் இறுதிச் சுற்றுக்கு நுழைகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு பிக்பாஸ் ரசிகர்களிடம் அதிகரித்துள்ள நிலையில் யார் எவிக்ட் ஆகிறார்கள் என்பதும் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.
தற்போது கிடைத்த தகவலின் படி ரசிகர்களின் ஓட்டுகளின் அடிப்படையில் நடிகர் தீபக், அருண் இருவரும் வெளியேறியிருப்பதாகத் தெரிகிறது.
தீபக் டாப் ஐந்து பேரில் ஒருவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறியிருக்கிறார்.
அருணுக்கு கடந்த சீசனின் டைட்டில் வின்னர் அர்ச்சனா ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அவரும் எவிக்ட் ஆகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அருண் வெளியேறிய எபிசோடு இன்றும் தீபக் வெளியேறும் எபிசோடு நாளையும் ஒளிபரப்பாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக தற்போது, ஏற்கனவே இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ரயான் தவிர சௌந்தர்யா, ஜாக்குலின், பவித்ரா, முத்துக்குமரன், விஷால், ஆகியோர் பிக்பாஸ் வீட்டிலிருக்கிறார்கள்.
இந்த ஆறு பேரில் யாருக்கு டைட்டில் கிடைக்கும்? உங்க கமெண்டையும் பதிவு செய்யுங்களேன் பிக்பாக் ரசிகர்களே.