Breath Analyzer: `மது பரிசோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் இனி செல்லாது' - பாட்னா உயர்நீதிமன்றம்
ப்ரீத் அனலைசர் மூலம் கிடைக்கும் தகவல் உறுதியான ஆதாரம் கிடையாது என்று பாட்னா உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டு வதாலேயே அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. அதனால், பெரு நகரங்கள், மாநகரங்களில் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுவதைத் தடுக்க போலீஸார் முக்கியச் சாலைகளில் வாகனச் சோதனைகளை மேற்கொள்கின்றனர். அதில் மது குடித்திருப்பதாக சந்தேகிப்பவர்களை, ப்ரீத் அனலைசர் (breath analyzer) சுவாசக் கருவியைக்கொண்டு கண்டுபிடிப்பார்கள்.

இந்த ப்ரீத் அனலைசர் கருவி மூலம் போதை வாகன ஓட்டிகளை கண்டுபிடிப்பதை நீதிமன்றங்கள் முக்கிய ஆவணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றும், மருத்துவர் வழங்கும் சான்றை அடிப்படையாக வைத்தே இந்த வழக்குகளை நீதிமன்றம் விசாரணைக்கு எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ப்ரீத் அனலைசர் கருவி மூலம் கிடைக்கும் தகவல் மது அருந்தியதற்கான உறுதியான ஆதாரம் கிடையாது. மது பரிசோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் இனி செல்லாது” என்று பாட்னா உயர்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.