செய்திகள் :

Cancer Awareness: 9 பேரில் ஒருவருக்கு கேன்சர் ரிஸ்க்... என்னதான் காரணம்?

post image

குழந்தை பேறு தொடர்பான மருத்துவமனைகள், நீரிழிவுக்கான மருத்துவமனைகளையடுத்து சமீப சில வருடங்களாக எங்குப் பார்த்தாலும் கேன்சர் மருத்துவமனைகள் கண்ணில்பட்டு பதற்றத்தை ஏற்படுத்துகின்றன. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் புற்றுநோய் மருந்தியல் துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் டாக்டர் கண்ணன் பேசுவது, நம் பதற்றத்தை ஆற்றுப்படுத்துவதுபோல இருக்கிறது.

''புகை, புகையிலை, ஆல்கஹால், சுற்றுச்சூழல், கதிர்வீச்சு, மரபணு, வைரஸ் என இதுவரை கேன்சர் வருவதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்ட விஷயங்களைத்தாண்டி, இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல காரணங்கள் புற்றுநோயின் பின்னணியில் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன.

Cancer - Representational Image

20 வயதில் கேன்சர் அட்வான்ஸ் ஸ்டேஜில் வந்து நிற்பவர்களைப் பார்த்தால் மனம் பதறுகிறது. நாம் எந்த இடத்தில் தவறு செய்கிறோம்? சாப்பிடும் உணவா, சூழலா, ரசாயன உரமா, பூச்சிக்கொல்லிகளா... எதைத் தவிர்த்தால் கேன்சர் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியவில்லை. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத இளம் தலைமுறைக்கு ஏன் இந்த நோய் வருகிறது என்பதைக் கண்டறிந்துவிட்டால், புற்றுநோயையே வராமல் தடுக்க முடியும்.

கேன்சர் வருவதற்காகப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், செல்களில் ஏற்படுகிற மாற்றங்கள்தான் கேன்சருக்கான உடனடி காரணம். செல்களில் ஏற்படுகிற மாற்றங்களைச் சரி செய்துகொள்கிற திறமை நம் உடம்புக்கே உண்டு. செல்கள் பிரியும்போது, சரி செய்துகொள்ள முடியாத அளவுக்கு அதில் பிரச்னை வரும்போதுதான் அவை கேன்சர் செல்லாக வளர ஆரம்பிக்கிறது'' என்றவர் தொடர்ந்தார்.

 டாக்டர் கண்ணன்
டாக்டர் கண்ணன்

''இந்திய மருத்துவ ஆய்வு இதழில் (Indian Journal of Medical Research) வெளிவந்த தரவுகளின்படி, ஒரு லட்சம் பேரில் 100 நபர்களை வாழ்நாள் முழுக்க அனலைஸ் செய்யும்போது, அதில் 9 பேரில் ஒருவருக்கு, அவருடைய வாழ்நாளில் கேன்சர் வரக்கூடிய ரிஸ்க் இருக்கிறது. அதற்காக, கட்டாயம் வரும் என்று சொல்ல முடியாது. நல்ல உணவு, வாழ்வியல் மாற்றங்களைச் சரிசெய்தால், இந்த ரிஸ்க்கை குறைக்க முடியுமா என்று ஆராய்ந்து வருகிறோம்'' என்கிறார் டாக்டர் கண்ணன்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://bit.ly/47zomWY

Apollo: அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை வகைப்படுத்த அரசுக்கு வலியுறுத்தல்!

உலக புற்றுநோய் தின அனுசரிப்பின் ஒரு பகுதியாக யுனிஃபை டு நோட்டிஃபை என்ற தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் முன்னெடுக்கிறது.இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் (AROI... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண்மையா?

Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடுமா... லேகியம், கஷாயம் போன்றவற்றில் நெய், தேன் போன்றவை சேர்ப்பது தான் காரணம் என்பது உண்மையா?பதில் சொல்கிறார் திருப்பத்தூரைச் சேர்ந்த சித... மேலும் பார்க்க

MAHER: மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் சுகாதாரத் திட்டங்கள் தொடக்கம்

MAHER: சமூக மேம்பாட்டிற்காக மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி சுகாதாரத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது.உயர்கல்வியில் முன்னோடியாக இருக்க பாடுபடும் பல்துறை நிகர்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உய... மேலும் பார்க்க

`Right to Die With Dignity' - முதல் மாநிலமாக உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தும் கர்நாடகா!

குணப்படுத்த முடியாத, உயிர் காக்கும் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் "கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை" அனுமதிக்கும் வகையில், கர்நாடக அரசு ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளதாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட... மேலும் பார்க்க

Pregnancy: `கருவுக்குள் கரு' - 5 லட்சம் கருக்களில் ஒன்றுக்கு ஏற்படும் அரியவகை; என்ன சிகிச்சை?

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 32 வயது கர்ப்பிணியின் வயிற்றில் உள்ள கருவின் உள்ளே மற்றொரு கரு இருப்பது தெரியவந்துள்ளது. இது மருத்துவ உலகில் மிக மிக அரிதான ஒன்றாகப் பார்... மேலும் பார்க்க

Apollo: வானகரத்தில் தனது 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை தொடங்கிய அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் சென்னை மாநகரில் அதன் 3-வது புற்றுநோய் சிகிச்சை மையத்தை பெருமிதத்துடன் இன்று தொடங்கி வைத்திருக்கிறது.வானகரத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த முழுமையான புற்றுநோய் சிகிச்சை மையம், தமிழ்நாட... மேலும் பார்க்க